வெளிநாட்டு நன்கொடை பெறுவதில் முறைகேடுகள்: 6 ஆயிரம் என்.ஜி.ஓ-க்களின் உரிமம் ரத்து செய்யப்படுமா?

வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெரும் வகையில் இந்தியாவில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வ அமைப்புகள் தங்களை பதிவு செய்து கொண்டுள்ளன.

நன்கொடை பெறுவதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்படுவதை அறிந்த மத்திய அரசு, வெளிநாடுகளில் இருந்து தன்னார்வ அமைப்புகள் நிதி உதவி பெறுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவிட்டது. மேலும், 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு அமைப்புகள் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக வரவு- செலவு கணக்கை தாக்கல் செய்யாமல் இருப்பதை உள்துறை அமைச்சகம் கண்டறிந்தது. இதையடுத்து கடந்த 2011-2015  ஆண்டுகளுக்கான வரவு செலவு கணக்குகளை கடந்த மே மாத இறுதிக்குள் சமர்பிக்குமாறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

ஆனால், இது வரை 5 ஆயிரத்து 922 தன்னார்வ அமைப்புகள் தங்கள் வரவு செலவு கணக்கை தாக்கல் செய்யவில்லை. இதனைத் தொடர்ந்து, எப்ஆர்சிஏ (Foreign Contribution Regulation Act) விதியின் படி ‘உங்கள் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது?’ என்ற கேள்வியையும் உள்துறை அமைச்சகம் எழுப்பியுள்ளது.

இதற்கு வரும் 23ம் தேதிக்குள் பதில் அளிக்காத தன்னார்வ அமைப்புகளின் வெளிநாட்டு நன்கொடை பெறும் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் சாலை வசதி கோரி பொதுமக்கள் முற்றுகை

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகவான் கார்டன் பகுதியில் கடந்த ஆறு ஆண்டுகளாக சாலை வசதி ஏற்படுத்தாததை கண...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 165 தொழில் முனைவோர்களுக்கு ரூ.83.20 லட்சம் மானியம் வழங்கல்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் Dr.K.சுப்பிரமணியன் மத்திய அரசின் RKVY-RAFTAAR-R-ABI திட்டத்தின் கீழ்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சங்க கால கடம்ப மரத்திலிருந்து மருத்துவ குணமுள்ள கடம்பின் பிரித்தெடுக்கும் முறைக்கு காப்புரிமை

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்ட கடம்ப மரத்திலிருந்து க...

திருப்பூர்: அமராவதி அணை 45.8 அடியாக உயர்வு; திருமூர்த்தி 32.95 அடி பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை ஜூலை 9ஆம் தேதி இன்று 45.8 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளது. வினாடிக்கு 297 கன அடி நீர்வ...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: தென்மேற்கு பருவமழை காரணமாக நீர் வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அத...

தேசிய இணைய பரிமாற்ற மையத்தில் இணைய நிர்வாக பயிற்சிக்கு SRIT மாணவி தேர்வு

கோயம்புத்தூர் Sri Ramakrishna Institute of Technology மாணவி ஷாலினி ஏ., புது தில்லி தேசிய இணைய பரிமாற்ற மையம் (NIXI) வழங்...