ஜி.எஸ்.டி அமல்படுத்துவது குறித்து வணிகத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம்

நாடு முழுவதும் பொருட்கள், சேவைகள் மீது ஒரே சீரான வரி விதிப்புக்காக சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) முறை வருகிற (ஜூலை) 1–ந் தேதி முதல் இந்த வரிவிதிப்பை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு இருந்தது. இதனை தொடர்ந்து ஜி.எஸ்.டி அமல்படுத்துவது தொடர்பாக நேற்று இரவு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள கோவை மண்டல வணிக வரித்துறை அலுவலகத்தில் கோவை மண்டல கலால் மற்றும் சுங்கவரித் துறை கூடுதல் ஆணையர் என்.ஜே.குமரேசன் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக சிறுதுளி அமைப்பின் தலைவர் வனிதா மோகன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றினார். பின்னர் வணிகத்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய கோவை மண்டல கலால் மற்றும் சுங்கவரித் துறை கூடுதல் ஆணையர் என்.ஜே.குமரேசன் ஐ.ஆர்.எஸ், கூறியதாவது; நாடு முழுவதும் பொருட்கள், சேவைகள் மீது ஒரே சீரான வரி விதிப்புக்காக மத்திய அரசு ஜி.எஸ்.டி முறையை ஜூலை 1ம் தேதி அமல்படுத்த திட்டமிட்டு இருந்தது. தற்போது அமல்ப்படுதப்பட்டுள்ள இந்த வரி வரவேற்க்கதக்கது. இதில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். ஜி.எஸ்.டி குறித்து சேவை மையம் துவங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் தங்கள் சந்தேகங்களை தெரிவிக்கலாம். இந்த சேவை மையத்துக்கு உரிய பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஜூன் 1ம் தேதி முதல் இதில் வணிகர்கள் தங்களை இணைத்துக் கொள்ளலாம். விற்பனை வரி 15ஆண்டுகளுக்கு முன்னர் அமல்படுதுவதாக இருந்தது தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் உற்பத்தி பெருக வாய்ப்புள்ளது. இதன் மூலம் நாட்டு மக்களுக்கு பொருளாதரத்தில் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.



Newsletter

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...