கோவையில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் மும்முரம், காந்திபுரம் மேம்பாலத்தில் கீழே 'வெர்டிகல் கார்டன்' அமைக்க மாநகராட்சி முடிவு

'ஸ்மார்ட் சிட்டி' திட்டப்பணிகள் செயல்படுத்துவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் கோவை மாநகராட்சி அலுவலகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மேலாண்மை இயக்குநரும், மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. ஆய்வுக் கூட்டத்தில் காந்திபுரம் மேம்பாலப்பணிகளில் கீழே ஆக்கிரமிப்பு ஏற்படாத வகையில் 'வெர்டிகல் கார்டன்' அமைக்க முடிவு செயப்பட்டுள்ளது.



மத்திய அரசின் சார்பில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டம், கடந்த 2015-ல் அறிவிக்கப்பட்டது. 2017ம் ஆண்டுடன் இரண்டு வருடம் கடந்ததையொட்டி, புனேயில் 25.6.2017ம் தேதி நடைபெற்ற கண்கவர் விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, புனே நகருக்கான 14 திட்டங்கள், பிற 19 நகரங்களுக்கான 69 திட்டப்பணிகளை தொடங்கிவைத்தார். இந்த திட்டப்பணிகள் ரூ.1,770 கோடி முதலீட்டில் நிறைவேற்றப்பட்டது.

இத்திட்டத்தில், மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவி மற்றும் மாநகராட்சி பங்களிப்புடன், பல்வேறு திட்டங்கள் கோவையில் செயல்படுத்தப்பட உள்ளன. ஆர்.எஸ்.புரத்தில் 'மாதிரி சாலை' அமைத்தல், குளங்கள் மேம்பாடு, 'சென்சார்' குப்பை தொட்டி, குடிமக்கள் செயலி, 'ஸ்மார்ட் பெஞ்ச்', 'ஸ்மார்ட்' பள்ளிகள் உருவாக்குதல் உள்ளிட்ட 12 விதமான பணிகள் திட்டமிடப்பட்டுள்ளது. 

'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்துக்கு, மத்திய அரசு தனது பங்களிப்பாக ரூ.200 கோடியை வழங்கி விட்டது. நிதி ஒதுக்கீடு செய்த பின்பே, பணிகள் சற்று வேகமெடுத்துள்ளன. ஒவ்வொரு பணிக்கும் பிரத்யேகமாக பொறியியல் பிரிவை சேர்ந்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த அதிகாரிகள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட திட்டம் குறித்த தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஸ்மார்ட் பென்ச், குடிமக்கள் செயலி போன்றவை கோவையில் அறிமுகம் திட்டம் துவங்கவுள்ளது. 



இத்திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. அதில் 'ஸ்மார்ட் சிட்டி'க்கான குடிமக்கள் செயலியை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டது. 22 மாநகராட்சி பள்ளிகளை, 'ஸ்மார்ட்' பள்ளிகளாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டது. இதில், ஐந்து பள்ளிகளுக்கு மட்டும் திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள பள்ளிகளுக்கும் உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்க, ஆணையர் அறிவுறுத்தினார். மேம்பாலங்களிலும், தூண்களிலும் போஸ்டர் ஒட்டும் கலாச்சாரத்தை ஒழிக்க, சொட்டு நீர் பாசனத்தில் செடிகள் வளர்க்கலாம் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டது.

பெங்களூருவில் இருப்பதைப் போன்று, மேம்பாலங்களின் கீழே ஆக்கிரமிப்பு ஏற்படாத வகையில் 'வெர்டிகல் கார்டன்' அமைக்கலாம் என்று ஆலோசகர்கள் விளக்கினர். இதுதொடர்பாக மதிப்பீடு தயாரித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டார். 



இதன்படி, பச்சை நிறத்திலுள்ள காந்திபுரம் பாலம் உட்பட நகரிலுள்ள பல்வேறு பாலங்களிலும் தூண்களில் செடிகள் வளர்க்கப்பட்டு, பசுமையான பாலங்களாக மாற்றப்படும். 

அடுத்து, நகரிலுள்ள எட்டு குளங்களை தூர்வாரி, கரையை பலப்படுத்தி, கழிவு நீரை சுத்திகரித்து, தண்ணீரை தேக்கவும், குளக்கரையில் பூங்கா, சிறுவர் சிறுமியர் விளையாட வசதி, சைக்கிளிங் செல்ல வசதி ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான இடைக்கால திட்ட அறிக்கையை, ஜூலை 15ல் தாக்கல் செய்ய, ஆலோசனை நிறுவனத்துக்கு ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். இதில், சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது மிகப்பெரிய வேலை. நீண்ட காலம் தேவைப்படும் என்பதால், குளத்தைச் சுற்றிலும் வேலி அமைத்தல், பூங்கா உருவாக்குதல், சைக்கிளிங் பாதை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை உடனடியாக மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். இதனால், இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த பணிகள், துவங்கிவிடுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், வெள்ளலூரில் கூடுதலாக 600 மெட்ரிக் டன் குப்பையில் உரம் தயாரிப்பதற்கு ஆலை அமைக்கவும், உக்கடம் மற்றும் கவுண்டம்பாளையத்தில் சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைக்கவும் திட்ட அறிக்கை, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி கிடைத்தவுடன் 'டெண்டர்' கோரப்படும் எனவும், 'ஸ்மார்ட் சிட்டி' தொடர்பான ஆய்வுக்கூட்டங்கள், இனி வாரந்தோறும் புதன்கிழமைகளில், தொடர்ந்து நடத்தப்படும் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Newsletter

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...