உதகையில் கன மழை - மக்கள் மகிழ்ச்சி

உதகைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடும் வெயில் நிலவி வந்ததால் குடியிருப்பு பகுதிகள் மட்டுமின்றி வனப்பகுதிகளிலும் கடும் வறட்சி நிலை ஏற்பட்டது.

விவசாயத்திற்கான நீரில் தட்டுப்பாடு ஏற்பட்டு பெரும்பாலான பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த தேயிலை செடிகள் கருகின. மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இந்நிலையில், தற்போது பருவமழை தொடக்கத்தின் காரணமாக அவ்வப்போது நீலகிரி, உதகை, கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் இரவு, பகல் என மழை பெய்து வருகிறது.

உதகைக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று பகலில் பெய்யத்துவங்கிய மழை இரண்டு மணி நேரத்தினையும் கடந்து கன மழையாக பெய்து வருகிறது. உதகை உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் இந்த மழையின் காரணமாக வனங்களில் பசுமை திரும்பும் என அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Newsletter

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...