கோவை மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியதால் பரபரப்பு


மார்கசிஸ்ட் கட்சியின் டெல்லியிலுள்ள தலைமை அலுவலகத்தில் ஜீன் ஏழாம் தேதி பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது அக்கட்சியின் பொதுச்செயலாளர் சீதாரம் யெச்சூரி ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரால் தாக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து இந்துத்துவா அமைப்புகளுக்கு எதிராக தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இதன் ஒருபகுதியாக கோவை மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இந்து முன்னணி மற்றும் பாஜகவினர் அதிகம் இருக்கக்கூடிய பகுதியான துடியலூரில் நேற்று மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பாக கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தியுள்ளனர்.

அப்போது இந்து முன்னனி மற்றும் இந்துத்துவா அமைப்பினரை கடுமையாக தாக்கி பேசியுள்ளனர். இதனையடுத்து, இன்று காலை 6 மணியளவில் மர்ம நபர்கள் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அம்பாசிடர் காரின் மீது பெட்ரோல் கலந்த இரண்டு மண்ணெண்ணெய் குண்டுகளை வீசியுள்ளனர்.



இதனைத் தொடர்ந்து, கட்சியினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் காட்டூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். சம்பவ இடத்திற்கு வந்த கோவை சட்டம் ஒழுங்கு இணை ஆணையர் லஷ்மி, மார்க்சிஸ்ட் கட்சியின் செயலாளர் மற்றும் உறுப்பினர்களிடம் விசாராணை நடத்தினார். சம்பவ இடத்திற்கு வந்த தடய அறிவியல் துறையினர் பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணய் கலந்த குண்டுகள் வீசியதில் உடைந்துபோன பாட்டில்களில் இருந்து கைரேகையை சேகரித்தனர். மேலும், மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு குற்றாவாளிகளை பிடிக்கும் முயற்சியில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.



Newsletter

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...