திராவிட நாடு, தனிதமிழ்நாடு போன்ற பிரிவினைவாத கருத்துகளுக்கு இளைஞர்கள் ஆட்பட்டு விடக்கூடாது- பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன்

திராவிட நாடு, தனிதமிழ்நாடு போன்ற பிரிவினைவாத கருத்துகளுக்கு இளைஞர்கள் ஆட்பட்டு விடக்கூடாது என கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பேட்டியளித்தார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராசன் கூறியதாவது:-

மிருகவதை தடுப்புச் சட்டம் தமிழகத்தில் தவறாக முன்னிறுத்தப்படுகிறது. மாடுகளை சந்தைகளில் விற்பனை செய்வதை வரைமுறைப்படுத்தவே இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் மாட்டு இறைச்சி சாப்பிடவோ, பயனில்லாத மாடுகளை இறைச்சிக்கு பயன்படுத்தவோ எந்த தடையும் இல்லை.

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, நடிகர் ரஜினிகாந்த் ஆகிய இருவரை சுற்றியே அரசியல் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இருவரும் சந்தித்ததாக கூறப்படுவது அதிகாரப்பூர்வமற்ற தகவல்.

தனியார் பால் நிறுவனங்கள் தாமாக முன்வந்து பாலில் இரசாயன கலப்பு இல்லை என்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டும். பால் தரம் குறித்த சோதனை உண்மையா அல்லது வெற்று சவாலா என்பது குறித்து தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும். 

திராவிட நாடு, தனி தமிழ்நாடு போன்ற பிரிவினைவாத கருத்துகளுக்கு இளைஞர்கள் ஆட்பட்டு விடக்கூடாது. தொடர்ந்து பிரிவினைவாத கருத்துக்களையும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக விஷ கருத்துக்களையும் பரப்பி வந்ததாலேயே மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவை பாஜக சைவ நாடாக மாற்ற முயற்சிப்பதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாஸ் தவறான பிரச்சாரம் செய்து வருகிறார். தமிழகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ்-யை பாஜக இயக்கவில்லை. 

மத்திய அரசின் நலத்திட்டங்களை தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு தமிழக அரசிற்கு உண்டு. தமிழக பாஜக தொடர்ந்து தமிழக நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து வருகிறது. 

தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் தரக்கூடாது என கேரளாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக கம்யூனிஸ்ட்கள் என்ன பதில் சொல்ல போகிறார்கள் என கேள்வி எழுப்பினார்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...