போளுவாம்பட்டி வனப்பகுதியில் குட்டி யானை பலி

போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட நரசிபுரம் வனப்பகுதியில் இரண்டு மாதங்களே ஆன குட்டி யானை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. 



இந்த குட்டி யானை உயிரிழந்து சில நாட்கள் ஆன நிலையில் வன விலங்குகள் இதன் உடலை உண்டுள்ளதால் இந்த யானை ஆண் யானையா அல்லது பெண் யானையா என சரியாக தெரியவில்லை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த வனச்சரகம் அருகே கேரள எல்லைப் பகுதியில் ஒரு யானை உயிரிழந்தது. அந்த யானை எவ்வாறு உயிரிழந்தது என தெரியாத நிலையில் தற்போது போளுவாம்பட்டி வனச்சரகத்தில் குட்டி யானை உயிரிழந்துள்ளது.

இந்த குட்டியானையின் உடல் பாகங்கள் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்பே யானை உயிரிழந்ததற்கான காரணங்கள் தெரியவரும் என மாவட்ட வன அலுவலர் எஸ்.ராமசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

Newsletter

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...