இன்று இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதத்தின் நோன்பு ஆரம்பம்

தமிழகத்தில் மே 28ம் தேதி முதல் ரமலான் நோன்பு துவங்குவதாக தமிழக தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்திருந்தார். அதனையடுத்து ரமலான் பிறை நேற்று மாலை தென்பட்டதால் இன்று முதல் இஸ்லாமியர்கள் நோன்பு நோற்க தொடக்கியுள்ளனர். மக்ரிப் தொழுகை சூரியன் மறைத்த பிறகு இஸ்லாமியர்கள் தொழுவது வழக்கம். அந்த தொழுகை முடிந்த பிறகு பிறை தென்படுகிறதா என்று காண்பார்கள். அவ்வாறு  ரமலான் பிறை தென்பட்டால்  அன்று முதல் இஸ்லாமியர்களின் ரமலான் நோன்பு ஆரம்பமாகிறது. இதையடுத்து பள்ளிவாசல்களில் தராவிஹ் என்னும் சிறப்பு இரவு தொழுகை நடைபெரும். இதில் எராளமான இஸ்லாமியர்களின் கலந்து கொள்வார்கள்.



இஸ்லாமியர்களின் ஜம்பெரும் கடைமைகளில் ஒன்று நோன்பு ஆகும். ரமலான் நோன்பு கடைபிடிக்க ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்கள் ஷாபான் மாதம் கடைசி நாள் மாலை வானத்தில் பிறை பார்ப்பர்கள். பிறை தெரிந்ததும் அன்று இரவு தொடங்கி 30 நாட்களும் ரமலான் முதல் நாள் அதிகாலை முதல்  மாலை சூரியன் மறையும் வரை பசித்திருந்து ஒவ்வொரு நாளும் விரதம் என்னும் நோன்பு இருப்பார்கள்.

இந்த நோன்பு கடைபிடித்தல் 30 நாட்கள் நடைபெறும். 30 ஆம் நாள் இஸ்லாமிய மாதம் ஷவ்வால் பிறை 1 அன்று ரமலான் பண்டிகை கூட்டுத் தொழுகையுடன் கொண்டாடுவார்கள். இதன்படி இந்த ஆண்டு ரமலான் பிறை தெரிகின்றதா என்று ஏராளமான இஸ்லாமியர்கள் நேற்று முன்தினம் எதிர்பார்த்த நிலையில், நேற்று மாலை ரமலான் பிறை தெரிந்ததை அடுத்து இன்று மே 28ம் தேதி முதல் ரமலான் நோன்பு துவங்கியதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி வாசல்களில் நேற்று  இரவு  தராவிஹ் என்னும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியர்களின் கலந்து கொண்டனர். காலை சூரியன் உதயம் ஆகும் முன்பு உணவு அருந்திவிட்டு இன்று மாலை சூரியன் மறைந்ததும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்காக பள்ளிவாசல்களில் நோன்புக் கஞ்சியுடன் சிறப்பு உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டு நோன்பு திறப்பார்கள். இதோ போல வருகின்ற 30 நாட்களும் நடைபெறும்.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...