உலக சுற்றுசூழல் தின நிகழ்ச்சி முன்னேற்பாடுகள் குறித்து அலுவலர்களுடன் மாநகராட்சி ஆணையர் ஆலோசனை

கோவை மாநகராட்சி சார்பாக வருகிற ஜூன் 5ம் தேதி உலக சுற்றுசூழல் தினம் அனுசரிக்கப்படவுள்ளதால், முன்ஏற்பாடு நடவடிக்கைகள் மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் மாநகராட்சி அலுவலர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில், கோவை மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் மூலம் வீடுவீடாகச் சென்று 100 சதவிதம் குப்பைகளை தரம் பிரித்து வாங்கப்பட்டு வருகிறது. இதனை மேலும் மேம்படுத்தும் வகையில் திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பொது மக்கள் தங்கள் வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரித்து, வீடு வீடாக குப்பை சேகரம் செய்ய வரும் மாநகராட்சித் துப்புரவுப் பணியாளர்களிடம் கொடுக்க வேண்டும்.

மேலும், குப்பைகளை தெருக்கள் மற்றும் கழிவுநீர் ஓடைகளில் கொட்டுவதை தவிர்த்து குப்பைத்தொட்டிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும் நமது நகரில் தூய்மை காக்க பொது மக்கள் திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்த்து தனிநபர் கழிப்பிடம் அல்லது பொது கழிப்பிடங்களை பயன்படுத்த ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அனைத்து வார்டு அலுவலகங்களிலும் துப்புரவு அலுவலர்கள், துப்புரவு ஆய்வாளர்கள், அனைத்து துப்புரவு பணியாளர்கள் தூய்மை இந்தியா திட்டத்தை முழுமையாக 100 சதவிகிதம் நிறைவேற்றும் வகையில் பொது மக்களுக்கு குப்பைகளை தரம் பிரித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பதாகைகள் பல்வேறு பொது இடங்களில் வைக்க அறிவுறுத்தப்படுகிறது.

மே மாதம் முதல் மாநகராட்சி சார்பாக 50 மைக்ரான் அளவு தடிமனுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் தடைசெய்யப்பட்டு அதை பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நடவடிக்கைகள் மேலும் முழுவீச்சில் தொடர ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் அவர்களால் ஆலோசனை வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில் கொசுவினால் பரவும் டெங்கு காய்ச்சல் குறித்து பொது மக்களிடத்தில் மாபெரும் விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், கொசு உற்பத்தியாகும் இடங்களை உடனுக்குடன் கண்டறிந்து போர்க்கால அடிப்படையில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைள் ஏற்படுத்தவும், கொசு உற்பத்தியை தடுக்க தேவையான உபகரனங்கள் வழங்கவும், களப்பணியாளர்களுக்கு நோய் கண்காணிப்பு மற்றும் தடுப்பு முறைகள் பற்றிய தொடர் பயிற்சி அளிக்கவும், காய்ச்சல் பாதிக்கப்பட்ட இடங்களை கண்டறிந்து சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தவும் ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் அவர்களால் உத்தரவிடப்பட்டுள்ளது. 

விடுமுறை காலம் முடிந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கவுள்ள நிலையில் டெங்கு போன்ற தொற்று நோய்கள் பரவாமல் இருக்கும் வகையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள கீழ்நிலை மற்றும் மேல்நிலை தொட்டிகளை பிளீசிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும், அதற்கான பதிவேடுகள் பராமரிக்கவும், குடிநீர் தொட்டிகள், குடிநீர் வடிகட்டும் இயந்திரங்கள், டிரம்கள், சிண்டெக்ஸ் ஆகிவற்றையும் முறையாக சுத்தம் செய்ய வேண்டும், விடுமுறை முடிந்து திறக்கப்பட உள்ள மதிய உணவு வழங்கும் பள்ளிகளில் உள்ள சேமிப்பு அறைகளில் பொருள்கள் கெட்டு போகாமல் உள்ளதையும், பூச்சி, புழு பாதிப்பு இல்லாததையும் உறுதி செய்யுமாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் துணை ஆணையர் ப.காந்திமதி, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், மாநகரப்பொறியாளர் (பொ) பார்வதி, நிர்வாக பொறியாளர் ஞானவேல், அனைத்து மண்டல உதவி ஆணையர்கள், அனைத்து சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மாநகராட்சி பொறியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...