இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு தடை- மோடி உருவபொம்மை எரிக்க முயன்ற தமிழ்புலிகள் கைது

இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்யக்கூடாது என மத்திய மோடி அரசு சட்டமியற்றியதைக் கண்டித்து கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு மோடியின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற தமிழ்புலிகள் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்யக்கூடாது. பசு கன்றுகளை விற்பதற்கு உரிய நடைமுறைகள், ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு மாடுகளை கொண்டு செல்ல கால்நடை துறையிடம் சான்று பெற வேண்டும் என மத்திய அரசு நேற்று மாலை அறிவித்தது.

இதனால் நாடு முழுவதும் மாட்டு இறைச்சி வியாபாரிகள் மற்றும் மாட்டிறைச்சி உண்பவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மக்களை வஞ்சிக்கம் மத்திய அரசின் இத்தகையப் போக்கைக் கண்டித்து தமிழ்புலிகள் கட்சியினர் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு மோடியின் உருவபொம்யை எரிக்க முயன்றனர்.

அப்போது, மத்திய அரசு தலித்துகளுக்கும், முஸ்லீம்களுக்கு எதிரான கொள்கையைக் பின்பற்றி வருவதாகவும், தொடர்ந்து இந்துத்துவா கொள்கையை பின்பற்றி ஆட்சி நடத்துவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும், உடனடியாக இந்த தடை உத்தரவை திரும்ப பெற வேண்டும் என ஆர்பாட்டத்தின் போது அவர்கள் வலியுறுத்தினர்.

இதனைத்தொடர்ந்து, பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி செய்த தமிழ்புலிகள் கட்சியினர் 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...