இறைச்சிக்காக மாடுகளை சந்தையில் விற்க தடை விதித்த மத்திய அரசை கண்டித்து மாட்டிறைச்சி விற்பனையாளர்கள் ஆர்ப்பாட்டம்.


இறைச்சிக்காக மாடுகளை சந்தையில் விற்க தடை விதித்த மத்திய அரசை கண்டித்து போத்துனூர் செட்டிபாளையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாட்டிறைச்சி விற்பனையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

 

நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை சந்தைகளில் விற்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. விவசாய காரணங்களுக்கான மாடுகளை விற்க, வாங்க புதிய விதிமுறைகளை கொண்டுவந்துள்ள மத்திய அரசு மிருகவதைக்கு எதிராகவும் புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. இதற்கான உத்தரவை மத்திய அரசு இன்று பிறப்பித்துள்ளது. 

இதையடுத்து, எருமை மாடு, பசு மாடு, காளை மற்றும் ஒட்டகம் ஆகியவற்றை இறைச்சிக்காக பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது. விவசாய பணிகளுக்காக மட்டும் விவசாயிகள் சந்தைகளில் மாடுகளை விற்க மத்திய அரசு அனுமதி தந்துள்ளது.கால்நடைகளை வாகனங்களில் கொண்டு செல்வதற்கும் புதிய விதிகளை மத்திய அரசு வகுத்துள்ளது., அதில் குறிப்பாக கால்நடைகள் சந்தைகளுக்கு கொண்டு வரப்படும் போது துன்புறுத்த கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கும் சட்டத்தை மத்திய அரசு உடனே திரும்ப பெற வலியுறுத்தி கோவை தெற்கு மாவட்ட மாட்டிறைச்சி விற்பனையாளர்கள் சங்கத்தினர் போத்தனூர் செட்டிபாளையத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாட்டின் தோலை ஏற்றுமதி செய்யும் மத்திய அரசு, ஜனநாயக நாட்டில் மாட்டிறைச்சி உணவு உண்ணுவதற்கு தடை விதிப்பதை எதிர்த்தும் கோஷங்களை எழுப்பினர். மேலும் மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தை திரும்ப பெறாவிட்டால் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்தனர்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...