வால்பாறையில் கோடை விழா இன்று துவக்கம்

வால்பாறையில் கோடை விழா இன்று துவங்கியது. இந்நிகழ்ச்சியை சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் துவக்கி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

ஆண்டுதோறும் வால்பாறை கோடை விழா மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. வரும் ஆண்டுகளிலும் இவ்விழாவானது மிகச் சிறப்பாக நடைபெறும். வால்பாறை மலைப்பகுதியில் பெய்யும் மழையானது ஆழியாறு அணை, திருமூர்த்தி அணையில் சேமிக்கப்பட்டு கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்ட விவசாயிகளுக்கு பேருதவியாக இருக்கிறது. மேலும் கோவை மாநகரம், உடுமலை, மடத்துக்குளம், குடிமங்களம், பொள்ளாச்சி ஆகிய பகுதிகளுக்கு இந்த மழை நீரானது குடிநீர் ஆதாரமாக திகழ்கிறது.

வால்பாறை மலையில் பெய்யும் மழை நீரானது பொள்ளாச்சி பகுதி விவசாயித்திற்கு ஆதாராமாக கொண்டு செய்யப்படும் தென்னை விவசாயமானது உலகளாவிய பெருமை சேர்க்கும் வகையில் உள்ளது. இங்கு விளையும் தென்னையானது. பன்னாட்டு அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

மேலும், வால்பாறையில் விளையும் தேயிலை, காப்பி, ஏலக்காய் மற்றும் குருமிளகு ஆகியவை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டு பயன் தரக்கூடியதாக வால்பாறை மலைப்பகுதி திகழ்கிறது. இதனால் வால்பாறை மலைப்பகுதியானது கொங்கு மண்டலத்தின் இதயமாக திகழ்கிறது. மேலும் வால்பாறை பகுதியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் பல்வேறு தார்சாலைகள் அமைக்கப்பட்டு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கலைபண்பாட்டுத்துறை, விளையாட்டுத்துறை, பள்ள கல்வித்துறை ஆகிய துறைகளின் மூலம் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். மேலும் மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளும் நடைபெறும். காவல்துறை சார்பில் நாய்களின் சாகச நிகழ்ச்சிளும் நடைபெறும்.

இன்று துவக்கப்பட்ட வால்பாறை கோடை விழாவானது 27.05.2017 மற்றும் 28.05.2017 ஆகிய மூன்று தினங்களுக்கு தொடர்ந்து நடைபெறவுள்ளது. ஆண்டு தோறும் நடைபெறும் கோடை விழாவானது வால்பாறையில் சுற்றுலா மேம்பாட்டிற்கு பேருதவியாக உள்ளது. இந்த கோடை விழாவில் அனைவரும் வருகை புரிந்து இந்த கோடை விழாவினை கண்டுகளிக்க வேண்டும்" இவ்வாறு சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் பேசினார்.



தோட்டக்கலைத்துறையினால் அமைக்கப்பட்ட மலர் கண்காட்சி மற்றும் காய்கறி கண்காட்சி, வனத்துறை, கோ-ஆப்-டெக்ஸ், சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சி துறை, சுற்றுலாத்துறை, மகளிர் திட்டம், செய்தி மக்கள் தொடர்புத்துறை, தமிழ்நாடு தேயிலை தோட்டக்கழகம் ஆகிய துறைகள் மூலம் அமைக்கப்பட்ட கண்காட்சியினை பொள்ளாச்சி வ.ஜெயராமன் துவக்கிவைத்து பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, சார் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணா, கோ-ஆப்.டெக்ஸ் தலைவர் மனோகரன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் வால்பாறை அமீது, நகர சுட்டுறவு வங்கி துணை தலைவர் மயில்வாகணன், மற்றும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...