போக்குவரத்து ஊழியர்களின் நிலுவைத் தொகை உடனடியாக வழங்காவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் - சிஐடியு மாநில தலைவர் சவுந்தராஜன்

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள புளூ ஹில்ஸ் ஹோட்டலில் இன்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சிஐடியு மாநில தலைவர் சவுந்தராஜன் தலைமையில் மாநிலக் குழுக்கூட்டம் நடைப்பெற்றது.



இக்கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டன. இதுகுறித்து சிஐடியு மாநில தலைவர் சவுந்தராஜன் கூறுகையில், வரும் ஜூன் 1-ஆம் தேதி நடைபெறும் அமைச்சர் கூட்டத்தில் அரசுப் போக்குவரத்து ஊழியர்களின் நிலுவைத்தொகை வழங்காவிட்டால் மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும்.

டாஸ்மாக் கடைகளில் பணி இழந்த ஊழியர்களுக்கு அரசுத் துறையில் உடனடியாக வேலை வழங்க வேண்டும். உதகையில் உள்ள எச்.பி.எப். தொழிற்சாலையில் பணிப்புரியும் ஊழியர்களுக்கு கடந்த நான்கு மாதங்களாக ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. உடனடியாக எச்.பி.எப். நிர்வாகம் ஊழியர்களின் ஊதியத்தை வழங்க வேண்டும்" என்றார்.



இந்த மாநிலக் குழுக்கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் ஆறுமுகநாயனார், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளன மாநிலப் பொருளாளர் தயாளன் உட்பட ஏராளமான அரசு போக்குவரத்து ஊழியர்கள் கலந்துக் கொண்டனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...