உதகை மலர் கண்காட்சி இறுதி நாளில் குவியும் சுற்றுலா பயணிகள்

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் கோடை காலத்தை முன்னிட்டு 121-வது மலர் கண்காட்சி கடந்த 19ம் தேதியன்று தமிழக முதலமைச்சரால் துவங்கப்பட்டது.

இந்த மலர் கண்காட்சியில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் வகையில், 150 வகைகளைச் சேர்ந்த 5 லட்சம் பூக்கள் மற்றும் செடிகள் வைக்கப்பட்டுள்ளன. 



மேலும் ஒரு லட்சம் மலர்களை கொண்டு உருவாக்கப்பட்ட மகாபலிபுரம் கடற்கரை கோயில், 6 ஆயிரம் மலர்களால் வடிவமைக்கப்பட்ட பறவை உள்ளிட்டவை சுற்றுலா பயணிகளை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. இங்குள்ள 20-க்கும் மேற்பட்ட அரங்குகளில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட மலர் கண்காட்சியை காண கண்காட்சி துவங்கப்பட்ட நாள் முதலே மக்கள் கூட்டம் அலை மோதி வருகிறது.



உதகை மலர் கண்காட்சியின் இறுதி நாளான இன்றும் தமிழகம் மட்டுமின்றி சுற்றுவட்டார மாநிலங்களில் இருந்து லட்சக் கணக்கான சுற்றுலா பணிகள் உதகையில் குவிந்து வருகின்றனர்.

இதனால், உதகை, நீலகிரிக்கு உட்பட்ட பொது இடங்கள், பேருந்து நிலையங்கள், பூங்காக்களில் கூட்டம் அலைமோதி வருகிறது. மக்களின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறாத வண்ணம் ஏராளமான காவல்துறையினர் உதகையில் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.



Newsletter

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...