10-ஆம் வகுப்பு தேர்வில் கோவையில் 238 பள்ளிகள் நூறு சதவிகிதம் தேர்ச்சி- முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி


கோவை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் 96.42 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றிருப்பதாகவும், 238 பள்ளிகள் நூறு சதவிகிதம் தேர்ச்சி பெற்று இருப்பதாகவும் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேச மூர்த்தி தெரிவித்தார்.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் தொடர்பாக கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், கோவை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 41 ஆயிரத்து 649 மாணவ, மாணவியர்களில் 40 ஆயிரத்து 156 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வு எழுதிய 20 ஆயிரத்து 511 மாணவர்களில் 19 ஆயிரத்து 447 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர் தேர்ச்சி விகிதம் 94.81 சதவிகிதமாக உள்ளது. மேலும், தேர்வு எழுதிய 21 ஆயிரத்து 138 மாணவிகளில் 20 ஆயிரத்து 709 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களது தேர்ச்சி சதவிகிதம் 97.79 ஆக உள்ளது. 

கோவை மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 96.42 சதவிகிதம், இது கடந்த ஆண்டைக்காட்டிலும் 0.2 சதவீதம் அதிகரித்துள்ளது. தேர்வு எழுதிய 519 பள்ளிகளில் 238 பள்ளிகள் நூறு சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது" என கணேசமூர்த்தி தெரிவித்தார்.

முன்னதாக, மாநில அளவில் தேர்ச்சி விகிதத்தில் கோவை மாவட்டம் 11 வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...