“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புகள் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் வெளியிடப்படுவது அனைத்து முதலமைச்சர்களும் பின்பற்றி வந்த நடைமுறையே என தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், 110 விதியின் கீழ் அறிவிப்புகள் வெளியிடப்படுவது குறித்து விளக்கமளித்தார். ஒரு துறையின் தேவைகள் மற்றும் மானியக் கோரிக்கைகளுக்கு ஏற்ப முதலமைச்சர் அறிவிப்புகளை வெளியிடுவது நடைமுறையில் உள்ளதாகவும், இதனை கடந்த காலங்களில் அனைத்து முதலமைச்சர்களும் பின்பற்றி வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.



காவல்துறையைப் பொறுத்தவரை சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பது, போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதுதொடர்பாக நேற்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் செங்கோட்டையன் தெரிவித்தார்.

சட்டப்பேரவை தொடர்பாக செங்கோட்டையன் கருத்து

சட்டப்பேரவை தேவையா என்பது குறித்து பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருவதாகக் கூறிய செங்கோட்டையன், கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தவர்கள் சட்டப்பேரவைக்கான கட்டடங்களை அமைக்க முயற்சித்துள்ளதாக தெரிவித்தார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும் ராணி மேரி கல்லூரி வளாகத்தில் சட்டப்பேரவையைக் கொண்டு வர முயற்சி மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா வழங்குவது குறித்து ஆய்வு

மந்தை புறம்போக்கு, நீர்வழி புறம்போக்கு, மேய்ச்சல் புறம்போக்கு உள்ளிட்ட நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையில் பட்டா வழங்கக் கூடாத நிலங்கள் குறித்து ஆய்வு செய்து, சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஆலயங்கள் தொடர்பான புறம்போக்கு நிலங்களுக்கும் இதே நடைமுறை பொருந்தும் என்றும், சம்பந்தப்பட்ட துறையின் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

“அனைத்து கேள்விகளுக்கும் முதலமைச்சரே பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை”

அரசு தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் முதலமைச்சரே பதிலளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

கடந்த ஆட்சிக் காலத்திலும் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது, அமைச்சர் ரகுபதி உள்ளிட்ட அமைச்சர்கள் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

விஜய் பிரதமர் வேட்பாளரா?

தமிழக வெற்றி கழகம் குறுகிய காலத்திலேயே அரசியல் களத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளதாகவும், இரண்டே மாதங்களில் சின்னத்தைப் பெற்று வரலாற்றில் இடம்பிடித்ததாகவும் செங்கோட்டையன் தெரிவித்தார்.

தமிழக மக்களை காப்பதற்கும், அவர்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதற்கும் முதலமைச்சர் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

அப்போது, “இந்திய பிரதமர் வேட்பாளராக விஜய்யை முன்னிறுத்த முடியுமா?” என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு நகைச்சுவையாக பதிலளித்த செங்கோட்டையன், “இதுபோன்ற கேள்விகளைக் கேட்டு என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்” எனக் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.

மேலும், தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்யின் ஆற்றல், சிந்தனை மற்றும் தொலைநோக்குப் பார்வை தமிழகத்தின் ஒவ்வொரு துறையிலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Newsletter

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...

Elderly Woman Killed in Truck Collision near Velandipalayam in Coimbatore

A 70-year-old woman was killed after the scooter she was travelling on with her daughter was hit by a heavy truck on Tha...

Break-In: 100 Kg of Silver Stolen from House in Coimbatore’s Oppanakara Street

A major burglary has been reported at the residence of an auditor on Oppanakara Street in Coimbatore, where unidentified...