கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. வேறு ஒரு வழக்கின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது இச்சம்பவம் போலீசாரின் கவனத்திற்கு வந்துள்ளது. அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை: துடியலூர் அருகே நள்ளிரவில் மனநலம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணிடம் அத்துமீற முயன்றதாக இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். பெண்ணின் அலறல் சத்தத்தைக் கேட்டு அங்கிருந்த தெரு நாய்கள் அந்த இளைஞரைத் தாக்கி துரத்திய காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.



இன்று அதிகாலை கோவை துடியலூர் அருகேயுள்ள என்.ஜி.ஓ. காலனி, அசோகபுரம் பகுதியில் பெட்டிக்கடைக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

அப்போது, பெட்டிக்கடை தீ வைப்பு சம்பவம் தொடர்பான காட்சிகளுடன், அதே பகுதியில் நடைபெற்றதாகக் கூறப்படும் மற்றொரு அதிர்ச்சிகரமான சம்பவமும் கேமராவில் பதிவாகியிருப்பது தெரியவந்தது.



அதிகாலை சுமார் 2 மணியளவில், அசோகபுரம் ரயில்வே மேம்பாலச் சாலையோரத்தில் பெண் ஒருவர் அமர்ந்திருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக வந்த இளைஞரை அப்பகுதியில் இருந்த இரண்டு நாய்கள் தொடர்ந்து குரைத்ததாகத் தெரிகிறது.

இதையடுத்து, அந்த இளைஞர் பெண்ணிடம் பேசியதுடன், நாய்களை விரட்டுவதற்காக கல்லை எடுத்து வீசியதாகக் கூறப்படுகிறது. எனினும், நாய்கள் அந்த இளைஞரை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருந்ததாக சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.



தொடர்ந்து, சாலையோரம் தனியாக இருந்த பெண்ணிடம் அந்த இளைஞர் அத்துமீற முயன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் கூச்சலிட்ட நிலையில், அருகிலிருந்த இரண்டு நாய்களும் உடனடியாக அந்த இளைஞரை நோக்கிப் பாய்ந்து தாக்கியதாகக் கூறப்படுகிறது.

நாய்கள் தொடர்ந்து குரைத்தபடி இளைஞரின் கால்களைக் கடித்து இழுத்ததால், அவர் பெண்ணை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. நாய்களும் அவரைத் தொடர்ந்து துரத்திச் சென்ற காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன.

இந்தக் காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட துடியலூர் போலீசார், கணேஷ் நகர் பகுதியைச் சேர்ந்த பூபதி என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண்ணை நாய்கள் காப்பாற்றியதாகக் கூறப்படும் இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...

கோவையில் பார் ஊழியரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

கோவை புலியகுளம் ரோடு பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள சன்ரிச் 11 - 11 பாரில் ஊழியர் பாண்டியராஜனிடம் இலவச மதுபானம் கேட்டு ம...

கோவை தடாகம் சாலையில் ஆம்புலன்ஸ் பணிமனையில் தீ விபத்து

கோவை தடாகம் சாலையில் உள்ள கோயில்மேடு அருகே ஆம்புலன்ஸ் பணிமனையில் திடீரென தீ பரவியது. இதனால் கரும்புகை மேகங்களாக சுற்றுவட...