கோவை செம்மொழிப் பூங்காவில் மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டல செம்மொழிப் பூங்காவில் மேயர் K. ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு, ரோஜாத் தோட்டம், அருங்காட்சியகம், மாநாட்டு அரங்கம் உள்ளிட்ட வசதிகளை ஆய்வு செய்து, பழுதுகள் சரிசெய்ய உத்தரவிட்டார்.


Coimbatore: கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள செம்மொழிப் பூங்காவை மேயர் K. ரங்கநாயகி ராமச்சந்திரன் இன்று (03.09.2026) நேரில் பார்வையிட்டு விரிவான ஆய்வு மேற்கொண்டார்.






வார்டு எண் 67-க்கு உட்பட்ட செம்மொழிப் பூங்கா வளாகத்தில், உலகத்தரத்தில் பல்வேறு நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள ரோஜாத் தோட்டம், மகளிர் அங்காடி, கற்சிலைகள், பழங்கால தமிழர்களின் பயன்படுத்திய பொருட்களின் அரசு தொல்லியல் அருங்காட்சியகம், படிப்பகங்கள் மற்றும் சிறுவர் விளையாட்டு மைதானம் ஆகியவற்றை மேயர் நேரில் பார்வையிட்டார்.






செம்மொழிப் பூங்காவில் பணிபுரியும் பணியாளர்களின் வருகை பதிவேடு, பொதுமக்களுக்கான நுழைவு வாயில் பதிவேடு ஆகியவற்றையும் ஆய்வு செய்த மேயர், அங்கு ஏற்பட்டுள்ள சிறு பழுதுகளை உடனடியாக சரிசெய்ய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.






அதனைத் தொடர்ந்து, செம்மொழிப் பூங்கா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம், கட்டணம் வசூலிக்கப்பட்டு நடத்தப்பட்டு வரும் சிறுவர்களுக்கான விளையாட்டு திடல், திறந்த வெளி உடற்பயிற்சி இடம், செயற்கை நீர்வீழ்ச்சி பகுதி, கட்டண உடற்பயிற்சி கூடம், கண்காணிப்பு CCTV கேமரா மூலம் கண்காணிக்கும் அறையின் செயல்பாடுகள் ஆகியவற்றை மேயர் குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.






மேலும், செம்மொழிப் பூங்கா வளாகத்தில் ரூ.27 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மாநாட்டு அரங்கம் (Convention Hall) கட்டுமானப் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த மேயர், பணிகளை விரைவாக மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.






இந்த ஆய்வின் போது, செயற்பொறியாளர் ஜெகன், உதவி செயற்பொறியாளர் சரவணகுமார் (பொது) மற்றும் செம்மொழிப் பூங்கா பணியாளர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...