மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்பட்டு 20,000க்கும் மேற்பட்ட மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த தப்ருக் நிகழ்வு 11வது ஆண்டாக நடைபெற்றது.


Coimbatore: மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவை உக்கடம் ஜி.எம் நகர் பகுதியில் சுன்னத் ஜமாத் அமைப்பு சார்பில் 20,000க்கும் மேற்பட்ட மக்களுக்கு இலவச நெய் சோறு வழங்கப்பட்டது. சுமார் 2000 கிலோ அரிசியில் தயாரிக்கப்பட்ட நெய் சோறு தப்ருக் நிகழ்வாக வழங்கப்பட்டது.






இஸ்லாமிய இறைத்தூதராக கருதப்படும் நபிகள் நாயகத்தின் பிறந்தநாளான மிலாடி நபி பண்டிகையன்று, நபிகளின் புகழையும் ஈகை பண்பையும் பொதுமக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. ஏழை எளிய மக்களின் பசியாற்ற வேண்டும் என்பது இஸ்லாமியர்களுக்கு அளிக்கப்பட்ட உத்தரவாக கருதப்படுகிறது.






அதன்படி, கோவையில் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் தப்ருக் எனப்படும் உணவு வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. உக்கடம் ஜி.எம் நகரில் ஆண்கள், பெண்கள் என தனித்தனி வரிசைகள் அமைக்கப்பட்டு காலை முதலே உணவு வழங்கப்பட்டு வருகிறது.




இந்த நிகழ்வில் அப்பகுதி மக்கள் மட்டுமல்லாமல், சுற்றுப்புற பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வருகை புரிந்து உணவு பெற்றுச் சென்றனர். கடந்த பத்து ஆண்டுகளாக சுன்னத் ஜமாத் சார்பில் இலவசமாக நெய் சோறு வழங்கப்பட்டு வரும் நிலையில், இது 11வது ஆண்டாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.




மிலாடி நபி பண்டிகை இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பல்வேறு பகுதிகளில் ஏழை எளியோருக்கு உணவு, உடை மற்றும் நிதி உதவிகள் வழங்கப்படுகின்றன. நபிகளின் போதனைகளையும், நற்பண்புகளையும் பின்பற்றும் வகையில் இத்தகைய தொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.


Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...