கடன் தள்ளுபடி செய்யும் வரை வங்கிக் கடன் கட்ட மறுப்பு: கோவையில் விவசாயிகள் சங்கம் தீர்மானம்

சோமையனூரில் ஜாதி, மதம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதிப்படி முழுமையான கடன் தள்ளுபடி செய்யும் வரை வங்கிக் கடன்களை கட்ட மாட்டோம் என 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் தீர்மானம் நிறைவேற்றினர். ரேஷன் கார்டு அடிப்படையிலான கட்டுப்பாடுகளை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.


Coimbatore: தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியதுபோல் விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யும் வரை வங்கிக் கடன்களை கட்ட மாட்டோம் என்று கோவை கணுவாய் அருகே சோமையனூர் பகுதியில் விவசாயிகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.


ஜாதி, மதம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில பொதுச் செயலாளர் கந்தசாமி தலைமையில் சோமையனூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சுற்றுப் பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.


கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன்களை தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல் முழுமையாக தள்ளுபடி செய்யும் வரை கடன்களை கட்ட மாட்டோம் என்று விவசாயிகள் தீர்மானம் நிறைவேற்றினர்.


ரேஷன் கார்டு அடிப்படையிலான கட்டுப்பாடுகள்


தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில பொதுச்செயலாளர் கந்தசாமி, "விவசாய பயிர் கடன் தள்ளுபடி சம்பந்தமாக பல கருத்துக்கள் நிலவி வருகின்றன. இதில் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் ஒவ்வொரு நிலைப்பாட்டை எடுக்கின்றனர். விவசாயிகள் தரப்பில் எதிர்க்கட்சித் தரப்பினர் அதிகமாக குரல் கொடுக்கின்றனர். எங்களைப் பொருத்தவரை அரசு வாக்குறுதி கொடுத்துள்ளது, அதில் சிறிதளவு நிறைவேற்றியுள்ளது என்பதை மறுக்க முடியாது" என்றார்.


"அரசாங்க அதிகாரிகள் விவசாயிகளை ஏமாற்றுகிறார்கள். ஒரு ரேஷன் கார்டில் ஒருவருக்கு தான் கடன் தள்ளுபடி கிடைக்கும் என்றும், இரண்டு விவசாயிகள் இருந்தாலும் ரேஷன் கார்டு ஒன்று என்பதால் அவர்களுக்கு கிடையாது என்கின்றனர். இதுபோல் வாக்குறுதியில் சொல்லவில்லை. எனவே அனைவருக்கும் முழுமையான கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கை" என்று கந்தசாமி தெரிவித்தார்.


கூட்டுறவு வங்கிகளின் எதிர்காலம் பாதிப்பு


"எங்கள் கடன்களை தள்ளுபடி செய்யும் வரை நாங்கள் யாரும் கடன்களை கட்ட மாட்டோம். அரசாங்கம் ஒரு வாக்குறுதி கொடுத்துவிட்டு பின்வாங்குவதால் இதுவரை செயல்பட்டு வந்த கூட்டுறவு வங்கிகள் இனி செயல்படாமல் போகும். ஏனென்றால் யாருமே கடன் கட்ட தயாராக இல்லை என்ற மனப்பான்மை உருவாக்கி விட்டார்கள்" என்று அவர் எச்சரித்தார்.


"புதிய அரசு அனைவரையும் அழைத்துப் பேசி உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கிறோம். மற்றவர்கள் விரிக்கும் வலையில் நாங்கள் விழமாட்டோம்" என்று கந்தசாமி தெரிவித்தார்.


இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர் அரங்கநாதன், பொருளாளர் சண்முகம், மாநில அமைப்பாளர் பிரபு, வடக்கு மாவட்ட செயலாளர் நரசிம்மராஜ், துணைத்தலைவர் பெருமாள்சாமி, S V N சேகர், கோவிந்தராஜ், D T K கதிர்வேல், N C K S சந்திரமோகன், V M D ரவி உள்பட 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...