ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆழியாறு அணையில் 59.65 அடி, பரம்பிக்குளம் அணையில் 34.1 அடி, சோலையாறு அணையில் 100.99 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Coimbatore: கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து வருவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





ஆனைமலையை அடுத்துள்ள ஆழியாறு அணை 120 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் நீர் வரத்தால் ஆகஸ்ட் 11 தேதி நிலவரப்படி 59.65 அடியாக நீர்மட்டம் உள்ளது. மேலும் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 260 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 100 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.





பொள்ளாச்சியை அடுத்த பரம்பிக்குளம் அணை 72 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து தொடர் நீர் வரத்தால் ஆகஸ்ட் 11 தேதி நிலவரப்படி 34.1 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1566 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 50 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.





வால்பாறை சோலையாறு அணை 160 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் நீர் வரத்தால் ஆகஸ்ட் 11 நிலவரப்படி 100.99 அடியாக நீர்மட்டம் உள்ளது. மேலும் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1975 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 1618 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், வரும் நாட்களில் அணைகளின் நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...