கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 60 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையிலும், ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையிலும் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 60 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று (11.08.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 60 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையிலும், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS முன்னிலையிலும் இக்கூட்டம் நடைபெற்றது.




பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 60 மனுக்களை மேயர் மற்றும் ஆணையாளர் பெற்றுக்கொண்டனர். இம்மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.




இக்கூட்டத்தில் துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், துணை ஆணையாளர்கள் த.குமரேசன், ர.சரஸ்வதி, மாநகர தலைமைப் பொறியாளர் விஜயகுமார், நகர்நல அலுவலர் Dr வீ.சி.சுபாஷ் காந்தி, நகரமைப்பு அலுவலர் தாமோதிரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.




மேலும் உதவி ஆணையர்கள் பிரகாஷ் (நிர்வாகம்), மகேஷ்கனகராஜ் (வருவாய்), நர்மதா (மேற்கு), தட்சிணாமூர்த்தி (கிழக்கு), கணேசன் (மத்தியம்), செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், மண்டல சுகாதார அலுவலர்கள், பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மாநகராட்சி அனைத்து அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கோயம்புத்தூர் மாநகராட்சியின் வழக்கமான நடைமுறையாக இருந்து வருகிறது. இதன் மூலம் பொதுமக்களின் பிரச்சினைகள் நேரடியாக மேயர் மற்றும் ஆணையாளர் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு விரைவான தீர்வு காணப்படுகிறது.


Newsletter

Festive Season: Special Trains to Operate Between Chennai and Kollam via Coimbatore

Southern Railway will operate weekly special trains between Chennai and Kollam via Coimbatore, Salem and Erode from Octo...

Severe Traffic Congestion in Coimbatore’s Madukkarai Sparks Urgent Plea to Expedite Railway Overbridge Work

Severe traffic congestion in Madukkarai is causing hardship to residents and Kerala-bound commuters. Delayed railway ove...

கோவை மாநகராட்சி குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 86 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செப்டம்பர் 22, 2026 அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மேயர் ரங்...

கூடலூர் நகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு ஆய்வு; தனியார் நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் நகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏஇடியிஎஸ் கொசுக்களின் உற்பத்தி...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப். 24-ல் நேரடி மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள இளமறிவியல் இடங்களை நிரப்ப நேரடி மாணவர...

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...