ஒண்டிப்புதூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி மக்கள் போராட்டம்; கிழக்கு மண்டல அலுவலகம் முற்றுகை

கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சிங்காநல்லூர் கிழக்கு மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 2011-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை 2023-ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

கோவை:கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சிங்காநல்லூர் கிழக்கு மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஒண்டிப்புதூர் சூர்யா நகர், சிவலிங்கபுரம், மீனாட்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள ரயில்வே கேட் காரணமாக, காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணிக்குச் செல்வோர் மற்றும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, கடந்த 2011-ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்காக அரசாணை வெளியிடப்பட்டதாகவும், ஆனால் கடந்த 2023-ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அந்த அரசாணை ரத்து செய்யப்பட்டதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், தற்போது அப்பகுதியில் மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை திட்டத்திற்கான கட்டமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் எதிர்காலத்தில் அப்பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான வாய்ப்பு பாதிக்கப்படலாம் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்தனர்.



இதையடுத்து, ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், மாநகராட்சி சார்பில் இதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் அதிகாரிகளிடம் மனு அளித்து கோரிக்கை விடுத்தனர்.

மேலும், தமிழக வெற்றிக் கழகத்தினர் ஆட்சி அமைத்த பின்னர் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

கடந்த வாரம் இதே கோரிக்கையை வலியுறுத்தி 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், தற்போது கிழக்கு மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

LPF and Affiliated Unions Protest in Coimbatore Against Centre and State Governments’ Labour Policies

The Coimbatore District Labour Progressive Federation (LPF) Council and affiliated unions staged a protest near the Red...

EPFO Wage Ceiling Revision: Coimbatore Officials Explain Benefits for Formal Sector Employees

The Union Cabinet’s decision to raise the EPFO mandatory coverage wage ceiling from ₹15,000 to ₹25,000, effective Septem...

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 23, 2026 அன்று காலை 9 மணி ம...

கோவையில் கைவினைஞர் தனித்தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

2027 ஜூலை மாதம் DGT நடத்தும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக (Private Candidates) கலந்து கொள்ள விரும்புவோர்...

மலையடிபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை மலையடிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை (23.09.2026) காலை 9 மணி முதல் மதியம் 2 மண...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 23, 2026 அன்று காலை 9 மணி முதல...