கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற்றது. எட்டிமடை அமிர்தா விஸ்வ வித்யாபீடம் பள்ளியிலிருந்து 110 மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். துணைவேந்தர் Dr S Ravi, முதன்மைச் செயல் அலுவலர் K Murugaiah ஆகியோர் பங்கேற்றனர்.


Coimbatore: கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழக நிகழ்த்துக்கலைப்புலத்தின் இசைத்துறை சார்பில் இந்திய அறிவு அமைப்பின் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா 07.08.2026 அன்று சிறப்பாக நடைபெற்றது. விழாவில் இசைத்துறை முதன்மையர் Prof Dr Sajitha Suku வரவேற்புரை வழங்கினார்.




விழாவில் பேசிய T K Ramesh, மாணவர்கள் பயன்பெறும் வகையில் அமைந்த திருப்புகழ் பயிலரங்கமானது பாராட்டுக்குரிய முயற்சி என்று குறிப்பிட்டார். கற்பகம் பல்கலைக்கழகத்தின் முதன்மைச் செயல் அலுவலர் K Murugaiah விழாவில் முன்னிலை வகித்தார்.






துணைவேந்தர் Dr S Ravi தமது வாழ்த்துரையில், கற்பகம் உயர்கல்விக்கழகத்தின் கல்விச்சேவைக்கு மேலும் அணி சேர்க்கின்ற வகையில் நிகழ்த்துக்கலைப்புலத்தின் இசைத்துறையானது செயல்படுவது பாராட்டுக்குரியது என்று தெரிவித்தார்.




நிகழ்த்துக்கலைப்புலத்தின் முதன்மையர் Dr V Janagamaayadevi தலைமையில், Dr Praseeda Pal, Dr Sajitha Suku, Meera Priyadarshini, Sruthilaya R, Dr Indumathi J மற்றும் Dr Sandhya Shankar Jayaram ஆகிய பேராசிரியர்கள் ஒருநாள் பயிலரங்கை ஒருங்கிணைத்தனர்.




எட்டிமடையில் உள்ள அமிர்தா விஸ்வ வித்யாபீடம் பள்ளியிலிருந்து 110 மாணவர்கள் பயிலரங்கில் கலந்துகொண்டு பயனுற்றனர். அவர்கள் பெருங்குழுவினராகப் பாடிய திருப்புகழ் பண்ணிசை விழாவுக்குச் சிறப்பு சேர்த்தது.




பதிவாளர் Dr BV Pradeep, முதன்மையர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்தனர். விழாவின் நிறைவாக இசைத்துறையின் பேராசிரியர் Dr Praseeda Pal நன்றியுரை வழங்கினார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...