கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்களால் தாக்குதல் நடத்தியது. முன்விரோதம் காரணமாக நடந்த இந்த வன்முறை சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
Coimbatore: கோவை நகரில் கல்லூரி மாணவர் மீது பீர் பாட்டில்களால் தாக்குதல் நடத்திய வழக்கில், போலீசார் மூன்று பேரை கைது செய்துள்ளனர். முன்விரோதம் காரணமாக நடந்த இந்த கொடூர வன்முறை சம்பவத்தில், இரண்டு இளைஞர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையைச் சேர்ந்த யாசிர் அகமது (19), சுல்தான் மொய்தீனின் மகன். இவர் கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் B.Com மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். பீளமேடு வெற்றிலைக்காரன் வீதியில் உள்ள ஒரு அறையில் தங்கி கல்லூரிக்கு சென்று வருகிறார்.
சமீபத்தில் மொபைல் போன் மற்றும் நகை பறிப்பு சம்பவம் தொடர்பாக, சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் ரொனால்டோ எடி மகிஷி என்பவர் மீது யாசிர் அகமது புகார் அளிக்க உதவி செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மகிஷியின் ஆதரவாளரான மருதுபாண்டி என்பவர், யாசிர் அகமதை போனில் தொடர்பு கொண்டு மிரட்டியுள்ளார்.
இதை அடுத்து யாசிர் அகமதுவும், அவரது நண்பரான தேவகோட்டை அகதிகள் முகாமைச் சேர்ந்த ரோஷன் சஞ்சயும் (22) கல்லூரி வளாகத்தில் மருதுபாண்டியை தட்டிக்கேட்டு தாக்கியதாகக் கூறப்படுகிறது.
பீர் பாட்டில்களால் கொடூர தாக்குதல்
இந்த முன்விரோதம் காரணமாக, நேற்று முன்தினம் மாலை, மருதுபாண்டி தலைமையில் சஞ்சய், அப்துல் கலாம், பேபி கரன், தீனதயாளன், செல்வம், இம்ரான் முகமது (19), ரதீஷ் (24), கோகுல் மற்றும் அடையாளம் தெரியாத ஒருவர் என 10 பேர் கொண்ட கும்பல் பீளமேட்டில் உள்ள யாசிர் அகமதுவின் அறைக்குள் கதவை உடைத்துக் கொண்டு புகுந்தது.
அங்கு இருந்த ரோஷன் சஞ்சயை கைகளாலும் கால்களாலும் மிதித்து, கத்தியின் கைப்பிடியால் கொடூரமாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும் யாசிர் அகமதை பிடித்து, அவர்கள் கொண்டு வந்திருந்த பீர் பாட்டில்களால் தலையில் சரமாரியாக உடைத்து தாக்கியதில், யாசிர் அகமதுவின் தலையில் பலத்த வெட்டுக் காயங்களும், ரோஷன் சஞ்சய்க்கு காயங்கள் ஏற்பட்டது.
மருத்துவமனையில் சிகிச்சை
ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுகுறித்து யாசிர் அகமது அளித்த புகாரின் பேரில், பீளமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட குனியமுத்தூரைச் சேர்ந்த இம்ரான் முகமது (19), பரமக்குடியைச் சேர்ந்த ரதீஷ் (24) மற்றும் சஞ்சய் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தப்பியோடிய மருதுபாண்டி உட்பட ஏழு பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.