PMBJP திட்டத்தின் கீழ் கோவைக்கு ரயிலில் வந்த 1,300 டன் மானிய உர மூட்டைகள்

பிரதம மந்திரி பாரதிய ஜன உர்வராக் பரியோஜனா (PMBJP) திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பிலான சுமார் 1,300 டன் மானிய யூரியா உரம் உள்ளிட்ட உர மூட்டைகள் கோவை கூட்ஷெட்டிற்கு ரயில் மூலம் வந்தடைந்துள்ளது. இந்த உரம் கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்ட விவசாயிகளுக்கு விரைவில் விநியோகிக்கப்பட உள்ளது.

கோவை: பிரதம மந்திரி பாரதிய ஜன உர்வராக் பரியோஜனா (Pradhan Mantri Bhartiya Jan Urvarak Pariyojana - PMBJP) திட்டத்தின் கீழ், கோவை, திருப்பூர், நீலகிரி மற்றும் ஈரோடு ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயனடையும் வகையில் சுமார் 1,300 டன் மானிய யூரியா உள்ளிட்ட உர மூட்டைகள் ரயில் வேகன் மூலம் கோவை கூட்ஷெட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.



மத்திய அரசின் PMBJP திட்டம் என்பது, பாரத்' (Bharat) என்ற ஒரே பெயரில் தரமான உரங்களை மானிய விலையில் நாடு முழுவதும் விவசாயிகளுக்கு வழங்கும் திட்டமாகும். இதன் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான யூரியா உரம் விரைவில் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட உள்ளதால், உர மூட்டைகளை லாரிகளில் ஏற்றி பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

விவசாயத்தின் முக்கிய பருவம் நடைபெற்று வரும் நிலையில், உரத் தேவையும் அதிகரித்துள்ளதால், விவசாயிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் ரயில் மூலம் அதிகளவிலான உரம் கோவைக்கு வரவழைக்கப்பட்டுள்ளது.

கோவை கூட்ஷெட் குடோனில் இறக்கி வைக்கப்பட்டுள்ள உர மூட்டைகள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட உர விற்பனை மையங்கள் மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட உள்ளது.



கோவை மட்டுமின்றி, திருப்பூர், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களிலும் இந்த உரம் விநியோகிக்கப்பட உள்ளதால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் இதன் மூலம் பயனடைவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு உரம் ஏற்றிய ரயில் கோவை கூட்ஷெட் இறக்குமதி குடோனை வந்தடைந்துள்ளதாகவும், தற்போது கூட்ஷெட்டில் நிலவும் சில நடைமுறை சிக்கல்களால் உரங்களை விரைந்து விநியோகிப்பதில் பாதிப்பு ஏற்படும் சூழல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.



இதுகுறித்து சக்தி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பாண்டியன் கூறுகையில், "விவசாயிகளுக்கு உரம் தாமதமின்றி சென்றடைவது மிகவும் அவசியம். கூட்ஷெட்டில் உர மூட்டைகளை கிளியரிங் செய்வது மற்றும் லாரிகளில் ஏற்றுவது போன்ற பணிகள் விரைவாக நடைபெற சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அப்போதுதான் கோவை, திருப்பூர், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கு உரங்களை காலதாமதமின்றி விநியோகிக்க முடியும்," என்றார்.

Newsletter

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...

PMBJP திட்டத்தின் கீழ் கோவைக்கு ரயிலில் வந்த 1,300 டன் மானிய உர மூட்டைகள்

பிரதம மந்திரி பாரதிய ஜன உர்வராக் பரியோஜனா (PMBJP) திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பிலான சுமார் 1,300 டன் மானிய யூரியா உ...