கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். எதிர்காலத்தில் மருத்துவக் கல்லூரியையும் தொடங்கி சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்படும் மருத்துவர்களை GKNM உருவாக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.

கோவை: கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஜி.கே.என்.எம். செவிலியர் கல்லூரியை இந்திய துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று திறந்து வைத்தார். விழாவில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.



குப்புசாமி நாயுடு அறக்கட்டளை தலைவர் ஆர். கோபிநாத், துணைத் தலைவர் ஜெயவர்த்தனவேலு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஜி. குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனையின் மூத்த மருத்துவர்கள், நிர்வாகிகள், செவிலியர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் விழாவில் பங்கேற்றனர்.



விழாவில் பேசிய தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கர், செவிலியர் பணி என்பது மேற்கத்திய கலாச்சாரத்தின் அடையாளம் அல்ல என்றும், மனித சேவையை உயர்வாகக் கருதும் இந்திய கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகவே செவிலியர் பணி இருந்து வருவதாகவும் தெரிவித்தார். மனித சேவையில் மிக உயர்ந்த பணிகளில் ஒன்றாக செவிலியர் சேவை விளங்குவதாகக் குறிப்பிட்ட அவர், சேவை மனப்பான்மையுடன் செயல்படுவதாலேயே ஜி.கே.என்.எம். மருத்துவமனை உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ளதாக பாராட்டினார்.

தொடர்ந்து சிறப்புரையாற்றியதுணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற அலுவல் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் குப்புசாமி நாயுடு விதைத்த சேவைச் சிந்தனைக்காகவே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதாகக் கூறினார். கல்வி மற்றும் மருத்துவம் ஆகிய இரு துறைகளிலும் ஜி.கே.என்.எம். நிறுவனம் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகவும், எதிர்காலத்தில் மருத்துவக் கல்லூரியையும் தொடங்கி சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்படும் மருத்துவர்களை உருவாக்க வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தார்.



மலைவாழ் மக்களிடையே ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் ரத்தசோகை பிரச்சினைகள் இன்னும் அதிகமாக உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அவற்றை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், மருத்துவ மற்றும் செவிலியர் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது பொதுமக்களிடையே சுகாதார விழிப்புணர்வை மேம்படுத்தும் என்றும் தெரிவித்தார்.

உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நாட்டில் அதிகரித்து வருவதாகக் கூறிய அவர், தமிழகத்தில் உறுப்பு தானம் சிறப்பாக ஒழுங்குபடுத்தப்பட்டு பலரது உயிர்களைக் காப்பாற்றி வருவது பாராட்டத்தக்கது என்றார். மேலும், பிரதமர் நரேந்திர மோடியின் இந்த ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு 76 ஆயிரம் பேர் கண்தானம் செய்யும் இலக்குடன் விழிப்புணர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.



மருத்துவத் துறையில் மத்திய அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், ஆயுஷ்மான் பாரத், வயோ வந்தனா உள்ளிட்ட திட்டங்கள் மற்றும் மலிவு விலை ஜெனரிக் மருந்துகள் வழங்கும் பிரதமரின் மக்கள் மருந்தகம் திட்டம் ஆகியவற்றை எடுத்துக்கூறினார். 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக உருவாக சுகாதாரத் துறையின் முன்னேற்றம் முக்கிய பங்காற்றும் என்றும், அதற்கு அரசு மற்றும் தனியார் துறைகளின் ஒருங்கிணைந்த பங்களிப்பு அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப். 24-ல் நேரடி மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள இளமறிவியல் இடங்களை நிரப்ப நேரடி மாணவர...

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...