கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சுய விவரங்களை பதிவு செய்தனர். ஜூலை 31 வரை Self Enumeration பணி நடைபெறும்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் இன்று (17.07.2026) Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த முகாமில், மாமன்ற கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தங்களது சுய விவரங்களை பதிவு செய்தனர்.




இன்றைய தினம் 17.07.2026 தொடங்கி ஜூலை 31ம் தேதி வரை Self Enumeration எனப்படும் சுய கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது. இந்த பணியின் போது பொதுமக்களிடம் 33 கேள்விகள் கேட்கப்படும். கட்டடம் மற்றும் வீட்டின் விவரங்கள், தண்ணீர் வசதி, மின்சாரம், கழிவறை, டிஜிட்டல் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த கேள்விகளுக்கு மக்கள் தாங்களாகவே பதில்களை பதிவேற்றம் செய்துகொள்ளும் வகையில் Census 2027 வடிவமைக்கப்பட்டுள்ளது.


ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை, கணக்கெடுப்பு பணிக்காக வீடு வீடாக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் வருகை தருவார்கள். அப்போது SEID ஐடியை தெரிவிக்கும் போது, அதில் விடுபட்டிருக்கும் கேள்விகளை வீடு தேடி வரும் அலுவலர்களிடம் பூர்த்தி செய்துகொள்ளலாம். அதன் மூலம் Census குறித்து அனைத்து தகவல்களும் வெற்றிகரமாக பதிவேற்றம் செய்யப்படும்.


முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர் மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, "ஒவ்வொரு வீடும் சேர்க்கப்பட வேண்டும். நமது Census, நமது வளர்ச்சி. தங்களின் தகவல் நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடும். மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள பொதுமக்கள் இப்பணிக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...

Elderly Woman Killed in Truck Collision near Velandipalayam in Coimbatore

A 70-year-old woman was killed after the scooter she was travelling on with her daughter was hit by a heavy truck on Tha...

Break-In: 100 Kg of Silver Stolen from House in Coimbatore’s Oppanakara Street

A major burglary has been reported at the residence of an auditor on Oppanakara Street in Coimbatore, where unidentified...