கோவையில் இரண்டு மாத ஊதியம் தராததால் உரிமைத் திட்டப் பணியாளர்கள் போராட்டம்

கோவையில் தமிழ்நாடு உரிமைத் திட்டத்தில் பணியாற்றும் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்து, உடனடியாக நிலுவைத் தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.


Coimbatore: கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைத் திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் பணியாளர்கள், கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதாகக் கூறி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒன்றுதிரண்டு புகார் மனு அளித்துள்ளனர்.






சுமார் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஒன்றுகூடி மாவட்ட ஆட்சியர் பவன் குமார்அலுவலகத்திற்கு வருகை தந்து, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி புகார் மனு அளித்தனர். மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் சென்றடைவதை உறுதிசெய்யும் பணிகளிலும், இயன்முறை சிகிச்சையாளர்களாகவும் தொடர்ந்து பணியாற்றி வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.






தங்களுக்கு 2028ஆம் ஆண்டு வரை பணி முடிவடையும் தேதி உள்ள நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால் குடும்பச் செலவுகளை மேற்கொள்வதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர். வீட்டு வாடகை, குழந்தைகளின் கல்விச் செலவு, வங்கிக் கடன் தவணைகள் உள்ளிட்ட அத்தியாவசிய செலவுகளை சமாளிக்க முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தனர்.






ஊதியம் தாமதமாக வழங்கப்படுவது பணியாளர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிப்பதுடன், பணியிலும் மனஉளைச்சலை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டனர். நிலுவையில் உள்ள இரண்டு மாத ஊதியத்தையும் உடனடியாக வழங்கநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இனிவரும் காலங்களில் மாதந்தோறும் உரிய நேரத்தில் ஊதியம் வழங்க மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.






அதேசமயம், இத்துறை சார்ந்த அலுவலர்கள் மெத்தனமான போக்குடன் செயல்படுவதாகவும் பணியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தங்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதை கண்டித்து, விரைவில் தீர்வு கிடைக்காவிட்டால் மேலும் தீவிரமான போராட்டங்களை மேற்கொள்ள தயாராக இருப்பதாகவும் எச்சரித்துள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் மத்திய மண்டல தூய்மைப் பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மத்திய மண்டலத்தின் வார்டு 48ல் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்து, தூய்மைப் பணியாளர்களுக...

ஒண்டிப்புதூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி மக்கள் போராட்டம்; கிழக்கு மண்டல அலுவலகம் முற்றுகை

கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சிங்காநல்லூர் கிழக்கு...

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...