வாளையார் சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: கணக்கில் வராத ரூ.1.13 லட்சம் பறிமுதல்

கோவை மாவட்டம் வாளையார் சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய திடீர் சோதனையில், மோட்டார் வாகன ஆய்வாளர் உள்பட மூன்று பேரிடம் கணக்கில் வராத ரூ.1.13 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


கோவை: கேரள மாநில எல்லையை ஒட்டியுள்ள கோவை மாவட்டம் வாளையார் சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனையில், கணக்கில் வராத ரூ.1.13 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோட்டார் வாகன ஆய்வாளர் உள்பட மூன்று அதிகாரிகள் இச்சோதனையில் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாளையார் சோதனைச்சாவடியில் தினமும் வணிக வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில், சோதனைச்சாவடியில்பணியாற்றும் அதிகாரிகள் முறைகேடாக பணம் வசூலிப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையை மேற்கொண்டனர்.




இச்சோதனையின் போது, மோட்டார் வாகன ஆய்வாளர் அருள்தாஸ் மற்றும் அவரது உதவியாளர்களான கல்பனா, பத்மா ஆகியோரிடம் இருந்த கணக்கில் வராத ரூ.1.13 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டதாகவும்,பறிமுதல் செய்யப்பட்ட இப்பணம் தொடர்பாக உரிய ஆவணங்கள் மற்றும் விளக்கங்களை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கேட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணை முடிவின் அடிப்படையில் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாளையார் சோதனைச்சாவடியில் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறுவது தொடர்பாக கடந்த காலங்களில் பல்வேறு புகார்கள் எழுந்திருந்த நிலையில், இந்த அதிரடி சோதனை முக்கியத்துவம் பெறுகிறது.

Newsletter

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...