கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/2 சவரன் தங்க நகையை கண்டுபிடித்து, மாநகராட்சி அலுவலர்கள் முன்னிலையில் உரிய உரிமையாளரான அலிமாவிடம் நேரில் ஒப்படைத்தார். இந்த நேர்மையான செயல் பாராட்டுக்குரியது.


Coimbatore: கோவை மாநகராட்சியில் தூய்மை பணியாளரின் நேர்மையான செயல் ஒன்று பலரின் பாராட்டுக்கு உரியதாக அமைந்துள்ளது. மத்திய மண்டலத்தின் கீழ் வரும் சிவானந்தா காலனி பகுதியில் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/2 சவரன் தங்க நகையை கண்டறிந்து, அதனை உரிய உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளார்.

கோவை மாநகராட்சி கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்தியம் என ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. 100 வார்டுகளில் உள்ள வீடுகள் தோறும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணிகள் தூய்மைப் பணியாளர்களால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், 10.07.2026 அன்று மத்திய மண்டலம் வார்டு எண் 68-க்கு உட்பட்ட சிவானந்தா காலனி, விசிகே லே அவுட் பகுதியில் வழக்கம்போல் குப்பை சேகரிப்பு பணி நடைபெற்று வந்தது. அப்போது, ஒப்பந்த தூய்மை பணியாளரான (SWMS) முருகன் (வயது 40), வீடுவீடாக சென்று குப்பை சேகரித்துக் கொண்டிருந்தார்.

குப்பை சேகரிப்பு பணியின் போது, முருகன் சேகரித்த குப்பையில் தவறுதலாக 1.1/2 சவரன் தங்க நகை கிடந்ததை கவனித்தார். உடனடியாக அவர் தனது மேலதிகாரிகளான சுகாதார மேற்பார்வையாளர் கார்த்திகேயன் மற்றும் மண்டல சுகாதார ஆய்வாளர் சரவணகுமார் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவல் அறிந்த மாநகராட்சி அலுவலர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது, தங்க நகையின் உரிமையாளர் அலிமா (வயது 54) என்ற பெண்மணி என்பதை கண்டறிந்தனர். இதையடுத்து, தூய்மைப் பணியாளர் முருகன், மாநகராட்சி அலுவலர்கள் முன்னிலையில், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/2 சவரன் தங்க நகையை உரிமையாளரான அலிமாவிடம் நேரில் ஒப்படைத்தார்.

தூய்மைப் பணியாளர் முருகனின் நேர்மையான செயல் பொதுமக்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளின் பாராட்டைப் பெற்றுள்ளது. ஒரு சாதாரண குப்பை சேகரிப்பு பணியாளர் காட்டிய நேர்மை, பிறருக்கும் முன்மாதிரியாக திகழ்கிறது என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...