கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியார் உரிமையாளர்கள் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். தவறினால் தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939-ன்கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


Coimbatore: கோவை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள அனைத்து கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியார் கட்டட உரிமையாளர்கள் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. வலியுறுத்தியுள்ளார். தவறும் பட்சத்தில் தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939-ன்கீழ் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்தியம் என ஐந்து மண்டலங்களுக்கு உட்பட்ட 100 வார்டு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் மூலம் கொசு ஒழிப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது டெங்கு காய்ச்சல் பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாவதற்கான சாதகமான காலநிலை நிலவுவதால், கட்டுமான இடங்களில் கடுமையான தடுப்பு நடவடிக்கைகள் அவசியம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கட்டுமான இடங்களில் பின்பற்ற வேண்டிய முக்கிய வழிமுறைகள்:

தனியார் கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களில் நீர் தேக்க தொட்டிகள் மற்றும் நீல நிற பிளாஸ்டிக் டிரம்களை திறந்த நிலையில் வைத்திருக்கக் கூடாது. தண்ணீர் தொட்டி மற்றும் கொள்கலன்களை பிளீச்சிங் பவுடர் அல்லது சுண்ணாம்பு கொண்டு சுத்தம் செய்து நீர் நிரப்பப்பட்டு கொசுக்கள் புகாத வண்ணம் மூடி வைக்க வேண்டும்.

கட்டுமான இடங்களில் உள்ள கட்டடத்தில் லிப்ட் பிட்டில் நீர் தேங்காத வகையில் பிளீசிங் பவுடர் அல்லது பயன்படுத்திய என்ஜின் ஆயில் பயன்படுத்தி கொசு புழுக்கள் உருவாகாமல் வைத்திருக்க வேண்டும்.

கட்டுமான இடங்களில் தங்கி பணிபுரியும் கட்டடப் பணியாளர்கள் தங்கும் தற்காலிக குடில் அல்லது கொட்டகையில் அவர்கள் பயன்படுத்திய வீணான பிளாஸ்டிக் பொருட்கள், டீ கப்புகள், டயர்கள், பாலித்தீன் பைகள், முட்டை ஓடுகள், தேங்காய் சிறட்டைகள் போன்றவற்றை உடனடியாக அகற்றிட வேண்டும்.

கட்டுமானப் பணி நடைபெறும் இடங்களில் வைத்திருக்கும் மண் அள்ளும் சட்டிகள், கலவை சுமந்து செல்லும் தள்ளுவண்டிகளை தினசரி கழுவிய பின்னர் நீர் தேங்காமல் வைத்துகொள்ள வேண்டும்.

கழிவு மேலாண்மை மற்றும் சுகாதார நடவடிக்கைகள்:

கட்டிடங்களில் பயன்படுத்திய பெயின்ட் டப்பாக்கள், உடைந்த குடங்கள், பிளாஸ்டிக் பைப்புகள், அட்டைகள், தெர்மோகோல் போன்றவற்றை நீர் தேங்காதவாறு உடனடியாக அகற்றிட வேண்டும். கட்டிட பணியாளர்கள் பயன்படுத்தும் பார்சல் சாப்பாடு கலன்கள், பாலித்தீன் கவர்கள், கண்ணாடி மற்றும் தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்டவைகளையும் அகற்றிட வேண்டும்.

கட்டடத்தினை சுற்றி கழிவு நீர் தேங்காதவாறு வைத்திருக்க வேண்டும். கட்டுமான இடங்களில் அமைத்திருக்கும் தற்காலிக கூரைகளில் டயர்கள் உள்ளிட்ட தேவையற்ற பொருட்கள் போடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் ஈடுபடும் மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, மேற்குறிப்பிட்டுள்ள விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. வலியுறுத்தியுள்ளார்.

விதிமுறைகளை மீறும் கட்டட உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகத்தின் மீது தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939-ன்கீழ் தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newsletter

வார்டு வளர்ச்சிப் பணிகள் புறக்கணிப்பு குற்றச்சாட்டு; கோவையில் தி.மு.க கவுன்சிலர் தர்ணா

கோவை அருகே தென்கரை பேரூராட்சி மன்றக் கூட்டத்தின் போது, தனது வார்டில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகள் புறக்கணிக...

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...