அதிமுக ஆட்சி தொடரக்கூடாது என்பதே மக்களின் மனநிலையாக இருப்பதாக திமுக எம்.பி திருச்சி சிவா கருத்து தெரிவித்துள்ளார்.

அதிமுக ஆட்சி தொடரக்கூடாது என்பதே மக்களின் மனநிலையாக இருப்பதாகவும், எப்போது தமிழகத்திற்கு தேர்தல் நடந்தாலும், இந்த ஆட்சி அகற்றப்பட்டு திமுக பொறுப்பிற்கு வருமென திமுக எம்.பி திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

கோவை செல்வபுரம் பகுதியில் திமுக சார்பில் இந்தி திணிப்பை கண்டித்தும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரியும், கருத்தரங்கு நடத்தப்பட்டது. இதில் கலந்து கொள்ள வந்த திமுக எம்பி திருச்சி சிவா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், போக்குவரத்து கழக ஊழியர்கள் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல், தமிழக அரசு பிடிவாதம் கட்டுவது ஏற்புடையது அல்ல என தெரிவித்தார். திமுக ஆட்சி காலத்தில் மெட்ரோ இரயில் திட்டம் கொண்டு வரப்பட்டதாகவும், ஆனால் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மோனா ரயில் திட்டத்திற்கு ஆதரவாக மெட்ரோ திட்டத்தை கிடப்பில் போட்டதாக குற்றம்சாட்டினார்.

திமுக ஆட்சி தொடர்ந்திருந்தால் சென்னை முழுமைக்கும் மெட்ரோ இரயில் இயக்கப்பட்டு இருக்குமெனவும், மதுரை, கோவை, திருச்சியிலும் மெட்ரோ இரயில் திட்டம் கொண்டு வரப்பட்டிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். தமிழக அரசை மத்திய அரசு கைப்பாவையாக இயக்குகிறதோ, இல்லையோ தமிழகத்தில் அரசு இருக்கிறதா என்பதே கேள்விக்குறியாக இருப்பதாக திருச்சி சிவா தெரிவித்தார். தமிழக அமைச்சர்கள் மக்கள் நலனை பேணவில்லை எனவும், அமைச்சர்கள் அதிமுக இணைப்பையும், வழக்குகளையும் பற்றி மட்டுமே கவலைப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். அதிமுக ஆட்சி தொடரக்கூடாது என்பதே மக்களின் மனநிலையாக இருப்பதாகவும், எப்போது தமிழகத்திற்கு தேர்தல் நடந்தாலும், இந்த ஆட்சி அகற்றப்பட்டு திமுக பொறுப்பிற்கு வருமென திருச்சி சிவா தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்தது தொடர்பான கேள்விக்கு, பாராட்டும், மகிழ்ச்சி் எனவும் பதிலளித்தார்.

திமுக தலைவர் கருணாநிதி வைரவிழா ஏற்பாடுகள் மிக சிறப்பாக நடந்து வருவதாகவும், தமிழகத்தில் நீண்ட காலத்திற்கு பிறகு தேசிய தலைவர்கள் மற்றும் பல்வேறு மாநில முதல்வர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக அவர் தெரிவித்தார். தமிழக அரசிற்கு உண்மையிலேயே அக்கறை இருந்திருந்தால் நீட் தேர்வை நிறுத்தி இருக்க முடியுமெனவும், சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் இப்பிரச்சணைக்கு தீர்வு காண தமிழக அரசிற்கு தெரியவில்லை எனவும் திருச்சி சிவா குற்றம்சாட்டினார்.

Newsletter

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...