கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தினர். மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS அறிவுறுத்தலின்படி பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில் இப்பணி மேற்கொள்ளப்பட்டது.


Coimbatore: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஒரே நாளில் சுமார் 400-க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. பொதுமக்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் இந்த சிறப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS அவர்களின் அறிவுறுத்தலின்படி, பொதுமக்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில், மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் (NGOs) இணைந்து 07.07.2026 அன்று செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்களுக்கான சிறப்பு வெறிநோய் (Anti-Rabies Vaccination-ARV) தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.



மாநகராட்சி சார்பில் நேற்று ஒரே நாளில் சுமார் 400-க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இப்பணியில் மாநகராட்சி கால்நடை மருத்துவ அலுவலர்கள், களப்பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பணியாளர்கள் ஒருங்கிணைந்து மனிதாபிமான முறையில் தெருநாய்களைப் பிடித்து, தடுப்பூசி செலுத்திய பின்னர், அவை பிடிக்கப்பட்ட அதே பகுதிகளில் மீண்டும் விடுவித்தனர்.

தெருநாய்கள் மூலம் மனிதர்களுக்கு பரவக்கூடிய வெறிநோயை தடுப்பதற்காக, மாநகரம் முழுவதும் விரிவான தடுப்பூசி இயக்கம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட உள்ளது. இதன்மூலம் நாள்தோறும் அதிக எண்ணிக்கையிலான தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு நடைபெற்று வருகிறது.

மேலும், பொதுமக்கள் மற்றும் தெருநாய்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தாமல், மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் இப்பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மனிதர்களும் விலங்குகளும் தொடர்ந்து பாதுகாப்பாக வாழ்ந்திடவும், வெறிநோய் இல்லாத கோவையை உருவாக்கிடவும் இப்பணிகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட உள்ளது.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...