கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில் நடைபெறுகிறது. நவீன வேளாண் தொழில்நுட்பங்கள், மதிப்புக்கூட்டப்பட்ட விவசாயம் மற்றும் புதிய தொழில் வாய்ப்புகள் குறித்து முன்னணி நிபுணர்கள் கருத்துரையாற்ற உள்ளனர்.


கோவை: இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ என்ற தலைப்பிலான வேளாண் கருத்தரங்கு, ஜூலை 10-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை, கொடிசியா வர்த்தகக் கண்காட்சி வளாகத்தின் ஹால் ‘D’-யில் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து, கோவை அவிநாசி சாலையில் உள்ள இந்திய தொழில் வர்த்தக சபை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ICCIC தலைவர் ராஜேஷ் லுந்த், துணைத் தலைவர்கள் துரைராஜ், அண்ணாமலை, கௌரவ செயலாளர் பிரதீப் மற்றும் வேளாண் கமிட்டி உறுப்பினர் சரவணன் சந்திரசேகரன் ஆகியோர் நிகழ்ச்சி தொடர்பான விவரங்களை வெளியிட்டனர்.

அவர்கள் கூறுகையில், இந்திய தொழில் வர்த்தக சபை சார்பில் நடைபெறும் ‘அக்ரி இன்டெக்ஸ்’ கண்காட்சியின் ஒரு பகுதியாக இந்த கருத்தரங்கு நடத்தப்படுவதாக தெரிவித்தனர். இதில் முன்னோடி விவசாயிகள், வேளாண் விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், வேளாண் தொழில் முனைவோர் மற்றும் துறைசார் வல்லுநர்கள் பங்கேற்று, நவீன வேளாண் தொழில்நுட்பங்கள், புதுமையான சாகுபடி முறைகள், நடைமுறை வேளாண் அறிவு மற்றும் வெற்றிகரமான விவசாய அனுபவங்கள் குறித்து கருத்துகளை பகிர்ந்து கொள்ள உள்ளனர்.

மேலும், வேளாண் சுற்றுலா, வேளாண்மையில் தானியக்கமும் செயற்கை நுண்ணறிவும், கோகோ சாகுபடி மற்றும் ஊடுபயிர் தொழில்நுட்பம், நீர் மேலாண்மை, செங்குத்து வேளாண்மை உள்ளிட்ட சமகால வேளாண் சார்ந்த முக்கிய தலைப்புகளில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த முன்னணி நிபுணர்கள் உரையாற்ற உள்ளனர்.

பொள்ளாச்சியைச் சேர்ந்த முன்னோடி விவசாயி வள்ளுவன், தமிழ்நாடு அரசின் வேளாண் சுற்றுலா விருது பெற்ற இறையழகன், மனோகரன் மற்றும் பாண்டுரங்க தவரே உள்ளிட்டோர் மதிப்புக்கூட்டப்பட்ட விவசாயம், நவீன தொழில்நுட்பங்கள், தொழில் வாய்ப்புகள் மற்றும் வேளாண் துறையின் எதிர்கால வளர்ச்சி குறித்து சிறப்புரையாற்ற உள்ளனர்.

விவசாயிகள், வேளாண் தொழில் முனைவோர், மாணவர்கள் மற்றும் வேளாண் துறையுடன் தொடர்புடைய அனைவருக்கும் சமீபத்திய தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் புதிய தொழில் வாய்ப்புகள் குறித்து அறிந்துகொள்ள இந்த கருத்தரங்கு பயனுள்ள தளமாக அமையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

கருத்தரங்கில் பங்கேற்க ஒருவருக்கு ரூ.600 (ஜிஎஸ்டி, தேநீர் மற்றும் மதிய உணவு உட்பட) பதிவுக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பங்கேற்க விரும்புவோர் நிகழ்ச்சி நடைபெறும் நாளில் நேரடியாக பதிவு செய்து கொள்ளலாம். மேலும், கூகுள் படிவம் மூலம் முன்பதிவு செய்து கலந்து கொள்ளலாம் என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வளர்ச்சிப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் வளர்ச்சிப் பணிகளை ஆணையர் கட்டா ரவி தேஜா IAS நேரில் ஆய்வு செய்தார். காலை உணவு திட்ட சம...

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வளர்ச்சிப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் வளர்ச்சிப் பணிகளை ஆணையர் கட்டா ரவி தேஜா IAS நேரில் ஆய்வு செய்தார். காலை உணவு திட்ட சம...

கோவை கணேசபுரம் பள்ளி கட்டுமானத்தை மேயர் நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் கணேசபுரம் பகுதியில் ரூ.95 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மாநகராட்சி நடுநிலைப் பள...

கோவை பீளமேடு பகுதியில் மழைநீர் வடிகால், சாக்கடை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் ரூ.10 லட்சம் மழைநீர் வடிகால் பணி, சாக்கடை அடைப்பு சரிசெய்தல், குப்பை சேகரிப்பு, மரக்குப...

கோவை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கான வங்கிக் கடன் சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.15,000 வங்கிக் கடன் வழங்க ஆகஸ்ட் 24 முதல் 29 வரை பிரதான அலுவலகம் மற்றும்...

ஓணம் பண்டிகை: பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

ஓணம் பண்டிகையையொட்டி பயணிகளின் அதிகரித்த தேவையை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பெங்களூரு SMVT மற்றும் திருவனந்தபுரம் வட...