சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்றொரு குற்றவாளியை தேடி போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து, இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், தலைமறைவாக உள்ள மற்றொருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

சூலூர் தென்றல் நகர் பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண், வீடியோ எடிட்டிங் தொழில் செய்து வருகிறார். திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து வசித்து வரும் அவருக்கு 4 வயது மகன் உள்ளார். சூலூர் கலையரங்கம் அருகே வாடகை அலுவலகத்தில் அவர் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

அதே கட்டிடத்தில் தங்கி இருந்த அந்தோணி மரிய ராபின் என்பவர், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி கடந்த ஓராண்டாக அந்தப் பெண்ணுடன் நெருக்கமாக பழகியதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர், அவருக்கு வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றதால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று மதியம் அந்தோணி மரிய ராபின் தனது நண்பரான கிரிஷ் சாமுவேல் குமாருடன் அந்தப் பெண்ணை சந்தித்தபோது, மயக்க மருந்து கலந்த ஜூஸ் கொடுத்ததாகவும், மயக்கமடைந்த நிலையில் இருவரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சம்பவத்தை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து வைத்திருப்பதாகக் கூறி, திருமணம் குறித்து வற்புறுத்தினாலோ அல்லது போலீசில் புகார் அளித்தாலோ அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகவும், அவரையும் அவரது மகனையும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் புகாரில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் அந்தோணி மரிய ராபின் (28) மற்றும் கிரிஷ் சாமுவேல் குமார் (30) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து, சூலூர் புதிய பேருந்து நிலையம் அருகே இருந்த கிரிஷ் சாமுவேல் குமாரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள அந்தோணி மரிய ராபினை கைது செய்ய தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...