இந்தி திணிப்பு, நீட் தேர்வு ஆகியவற்றைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக மத்திய அரசின் நீட் தேர்வு மற்றும் இந்தி திணிப்பு நடவடிக்கை ஆகியவற்றைக் கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



திமுக மாநில மாணவர் அணி செயலாளர் புகழேந்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் மற்றும் சொத்து பாதுகாப்புக் குழு துணைத் தலைவர் பொங்கலூர்  பழனிச்சாமி, சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து  கொண்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கை மற்றும் நீட் தேர்வு ஆகியவற்றிக்கு எதிராக முழக்கம் எழுப்பப்பட்டது.



பின்னர், பேட்டியளித்த மாணவர் அணி செயலாளார் புகழேந்தி கூறுகையில், நீட் தேர்வின் மூலம் வடமாநில மாணவர்களை  மருத்துவ படிப்பில் சேர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தி திணிப்பு மற்றும் நீட் தேர்வு போன்ற  நடவடிக்கைகளால் இந்தியா உடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த சர்வாதிகார போக்கு காரணமாக பாதிக்கப்படும் இளைஞர்கள், மாணவர்கள் ஒன்று திரண்டு கிளர்ச்சி செய்ய வாய்ப்பிருக்கின்றது" என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மாணவரணி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...