காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இருவரை கைது செய்து நீதிமன்றக் காவலில் அடைத்தனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, காரமடை காவல் நிலைய போலீசார் மேற்கொண்ட சோதனையில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, இன்று காரமடை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேட்டுப்பாளையம் மெயின் ரோடு பகுதியில் சோதனை நடத்தப்பட்டது.

அப்போது, கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் பரிஹா (25) மற்றும் துபிச்சந்திர பதான் (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர், கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர்.

போதைப்பொருள் விற்பனை மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பவன் குமார் எச்சரித்துள்ளார்.

மேலும், போதைப்பொருள் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981 81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081 00100 ஆகியவற்றில் தெரிவிக்கலாம். தகவல் அளிப்போரின் விவரங்கள் முழுமையாக ரகசியமாக பாதுகாக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...