கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்கி 2 பவுன் தங்கச் சங்கிலி மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்துச் சென்று தப்பிய மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை குனியமுத்தூர் பகுதியில் புதிய வாடகை அறை தேடிச் சென்ற கல்லூரி மாணவர் ஒருவரை அறைக்குள் அடைத்து வைத்து, கத்தி மற்றும் இரும்புக் கம்பியால் தாக்கி, தங்க நகை மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது மாணவர் ஒருவர், குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த ஆறு மாதங்களாக நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி வந்த அவர், கடந்த 10 நாட்களாக தனியாக தங்க புதிய வாடகை அறை தேடி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அவருக்கு அறிமுகமான நண்பர் ஒருவர் குனியமுத்தூர் இ.பி. காலனியில் வாடகை அறை இருப்பதாக தெரிவித்ததை அடுத்து, மாணவர் அந்த அறையைப் பார்ப்பதற்காக அங்கு சென்றுள்ளார்.

அப்போது, அறைக்குள் ஏற்கனவே இருந்த குனியமுத்தூரைச் சேர்ந்த சலகா என்ற ஆகாஷ், பாண்டி மற்றும் அவர்களது கூட்டாளி ஒருவர், மாணவரை அறைக்குள் வைத்து கதவை உள்புறமாக பூட்டி அடைத்து வைத்ததாக கூறப்படுகிறது.

பின்னர், கேசவனிடம் பணம் கேட்டு மிரட்டிய அவர்கள், பணம் தர மறுத்ததால் இரும்புக் கம்பியால் அவரது முதுகில் தாக்கியதுடன், கத்தியால் தோள்பட்டை மற்றும் முதுகுப் பகுதியில் குத்தி காயப்படுத்தியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலி தாங்க முடியாமல் அலறிய மாணவரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய கும்பல், அவர் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்ததுடன், அவரது மோட்டார் சைக்கிளையும் பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது. மேலும், குடும்பத்தினரிடம் பேசி ரூ.2 லட்சம் பெற்றுத் தர வேண்டும் என மிரட்டி, மாணவரை அறைக்குள் அடைத்து வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் தரப்பில் கூறுகையில், சம்பவ இடத்திற்கு சென்றபோது குற்றவாளிகள் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். அப்போது, முதல் மாடி ஜன்னல் வழியாக கீழே குதித்து தப்பியதால், சிமெண்ட் மேற்கூரை சீட்டுகள் உடைந்து விழுந்ததாக கூறப்படுகிறது.

பின்னர், வெளியே நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு அவர்கள் தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மாணவர் அளித்த புகாரின் பேரில், குனியமுத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள சலகா என்ற ஆகாஷ், பாண்டி உள்ளிட்ட மூவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...