கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கிறார்கள். முன்னணி வேளாண் நிறுவனங்கள், வங்கிகள், உணவு பதப்படுத்துதல் நிறுவனங்கள் பங்கேற்க அழைக்கப்படுகின்றன. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெறும்.


Coimbatore: கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மாணவர் நல மையம், வேளாண் துறையில் சிறப்பு பயிற்சி பெற்ற திறமையான இளைய தலைமுறையினரை முன்னணி நிறுவனங்களுடன் இணைக்கும் நோக்கில், வரும் ஜூன் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் 2026-ஐ நடத்துகிறது.

கோயம்புத்தூரில் உள்ள வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை இரண்டு நாட்கள் இந்த முகாம் நடைபெறும். இந்த வேலைவாய்ப்பு முகாமில், பல்கலைக்கழகத்தின் பல்வேறு உறுப்புக் கல்லூரிகளில் இருந்து இளங்கலை வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், தொழில்நுட்பம், முதுகலை மற்றும் முனைவர் பட்டப் படிப்பு படிக்கும் 2000-க்கும் மேற்பட்ட இறுதி ஆண்டு மாணவர்கள் தங்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்ய ஆர்வத்துடன் பங்கேற்க உள்ளனர்.

திறமையான மற்றும் ஆற்றல்மிக்க புதிய பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க முன்னணி வேளாண் சார்ந்த நிறுவனங்கள், விதை, உரம் மற்றும் பண்ணை இயந்திரங்கள் தயாரிப்பு நிறுவனங்கள், உணவு பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள், சுய வேளாண் தொழில் முனைவோர் நிறுவனங்கள், முன்னணி பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு முகமைகள் இந்த முகாமைப் பயன்படுத்தி தங்களுக்குத் தேவையான தகுதியான மாணவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறு அழைக்கப்படுகிறார்கள்.

இந்த முகாமில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள், தங்களின் வருகையையும் காலிப்பணியிட விவரங்களையும் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும். கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவர் நல மைய முதன்மையாளரின் மின்னஞ்சல் முகவரியான [email protected] மூலமாகவோ அல்லது 0422-6611242 என்ற தொலைபேசி எண்ணில் நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம்.

இந்த வேலைவாய்ப்பு முகாம், பல்கலைக்கழக மாணவர்களுக்கும் முன்னணி நிறுவனங்களுக்கும் இடையே நேரடி தொடர்பை ஏற்படுத்தி, வேளாண் துறையில் தகுதியான பணியாளர்களை நியமிக்கும் வாய்ப்பை வழங்குகிறது. புதிய சிந்தனைகள் கொண்ட திறமையான மாணவர்களை நேரடியாக நேர்காணல் செய்து தேர்வு செய்யும் வாய்ப்பு நிறுவனங்களுக்கு கிடைக்கும்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...