கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை அர்ச்சகர்கள் மற்றும் பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள அருள்மிகு மகாமாரியம்மன் திருக்கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை அர்ச்சகர்கள் மற்றும் பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூன் 9-ம் தேதி இரவு கோவில் வளாகத்திற்குள் சந்தேகத்திற்கிடமாக நுழைந்த நபர் ஒருவர், அங்கு இருந்த சுமார் ஒன்றே முக்கால் அடி உயரமுள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடியதாக கூறப்படுகிறது. பின்னர், சிலையை வெள்ளை நிற பையில் மறைத்து வைத்து கோவிலில் இருந்து வெளியேற முயன்றுள்ளார்.



அவரது நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த கோவில் அர்ச்சகர்கள், ஜோதிபுரத்தைச் சேர்ந்த சதாசிவம் (68) மற்றும் குமாரசாமி ஆகியோரின் உதவியுடன் அந்த நபரை மடக்கிப் பிடித்தனர். தொடர்ந்து, அவரது பையை சோதனையிட்டபோது, அதில் திருடப்பட்ட விநாயகர் சிலை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, அந்த நபரையும் மீட்கப்பட்ட சிலையையும் பொதுமக்கள் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், சிலை திருட்டு முயற்சியில் ஈடுபட்டவர் சங்கனூர் சாலையைச் சேர்ந்த நடராஜன் (54) என்பது தெரியவந்தது.

பின்னர், நடராஜனை கைது செய்த போலீசார், அவரைநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

காவல் நிலையத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த கோவிலில் துணிகரமாக நடைபெற்ற திருட்டு முயற்சி அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...