சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப் பிறகு 850 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை இன்று போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், 850 பக்கங்கள் கொண்ட விரிவான குற்றப்பத்திரிகையை காவல்துறையினர் இன்று கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்கின்றனர்.

தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக, காவல்துறை உயர் அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சம்பவம் நடைபெற்ற 24 மணி நேரத்திற்குள் கார்த்திக் மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஐஜி ரம்யா பாரதி தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழுவில் டிஐஜி, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மூன்று டிஎஸ்பிக்கள் மற்றும் நான்கு காவல் ஆய்வாளர்கள் இடம்பெற்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

கைது செய்யப்பட்ட இருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணை, அறிவியல் பூர்வமான தடயங்கள், சாட்சிகளின் வாக்குமூலங்கள், மருத்துவ அறிக்கைகள் உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களும் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.

விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, 850 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. சம்பவம் நடைபெற்ற சில வாரங்களிலேயே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதால், வழக்கின் விசாரணை விரைவுபடுத்தப்பட்டு குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உச்சபட்ச தண்டனை பெற்றுத் தர வழிவகுக்கும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Newsletter

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வளர்ச்சிப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் வளர்ச்சிப் பணிகளை ஆணையர் கட்டா ரவி தேஜா IAS நேரில் ஆய்வு செய்தார். காலை உணவு திட்ட சம...

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வளர்ச்சிப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் வளர்ச்சிப் பணிகளை ஆணையர் கட்டா ரவி தேஜா IAS நேரில் ஆய்வு செய்தார். காலை உணவு திட்ட சம...

கோவை கணேசபுரம் பள்ளி கட்டுமானத்தை மேயர் நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் கணேசபுரம் பகுதியில் ரூ.95 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மாநகராட்சி நடுநிலைப் பள...

கோவை பீளமேடு பகுதியில் மழைநீர் வடிகால், சாக்கடை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் ரூ.10 லட்சம் மழைநீர் வடிகால் பணி, சாக்கடை அடைப்பு சரிசெய்தல், குப்பை சேகரிப்பு, மரக்குப...

கோவை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கான வங்கிக் கடன் சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.15,000 வங்கிக் கடன் வழங்க ஆகஸ்ட் 24 முதல் 29 வரை பிரதான அலுவலகம் மற்றும்...

ஓணம் பண்டிகை: பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

ஓணம் பண்டிகையையொட்டி பயணிகளின் அதிகரித்த தேவையை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பெங்களூரு SMVT மற்றும் திருவனந்தபுரம் வட...