கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனியார் FL-2 பார்கள் மற்றும் கோவை-கேரள எல்லைப் பகுதிகளில் அதிக கூட்டம் திரண்டது. சுமார் ரூ.8 கோடி விற்பனை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்.


கோவை: கோவை மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு 215 மதுக்கடைகளை ஒரே நாளில் மூடியதால், மதுபானம் தட்டுப்பாடு காரணமாக தனியார் FL-2 மனமகிழ் மன்றங்கள் மற்றும் கேரள எல்லைப் பகுதிகளில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.




தமிழகம் முழுவதும் அண்மையில் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டநிலையில், கோவை மாவட்டத்தில் மட்டும் 69 கடைகள் மூடப்பட்டதாக கூறப்படுகிறது. மூடப்பட்ட கடைகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு உடனடியாக மாற்றுப் பணி வழங்க வேண்டும், காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை வெளிநபர்கள் அல்லது தனியார் ஏஜென்சிகள் மூலம் செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.




மேலும், பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் உள்ள கடைகளை அகற்றுவதற்குப் பதிலாக, விதிமுறைகளுக்கு உட்பட்ட கடைகளே மூடப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் தனியார் FL-2 மனமகிழ் மன்றங்களுக்கு லாபம் ஏற்படுத்தும் நோக்கம் உள்ளதாகவும் ஊழியர்கள் குற்றம்சாட்டினர்.

அதன் தொடர்ச்சியாக, கோவை மாவட்டம் முழுவதும் சுமார் 215 மதுக்கடைகள் செயல்பாடு நிறுத்தப்பட்டன. முன்னறிவிப்பு இன்றி இந்த வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டதால், மதுபானம் வாங்க வந்த மக்கள் திகைப்பில் ஆழ்ந்தனர்.

முன்னறிவிப்பு இன்றி திடீரென 215 கடைகள் மூடப்பட்டதால், டாஸ்மாக் பார்கள் வெறிச்சோடியன.மேலும், பார்களில் தயார் செய்யப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள உணவுப் பொருட்கள் வீணானதாக பார் உரிமையாளர்கள் வேதனை தெரிவித்தனர்.






இந்த வேலைநிறுத்தத்தால் கோவையில் மட்டும் சுமார் ரூ.8 கோடி மதுபான விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மது கிடைக்காததால் பலர் கேரள எல்லைப் பகுதிகளை நோக்கி திரண்டனர். இதனால் தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில் உள்ள கள்ளுக்கடைகள் மற்றும் மதுபானக் கடைகளில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. முன்னெச்சரிக்கையாக, கேரளாவில் இருந்து சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் கடத்தப்படுவதைத் தடுக்க போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.






இதற்கிடையில், கோவையில் செயல்பட்டு வரும் தனியார் FL-2 பார்களிலும் கட்டுக்கடங்காத கூட்டம் ஏற்பட்டதால், சட்டம் ஒழுங்கு பிரச்சினையைத் தவிர்க்க சில பார்கள் அவசரமாக மூடப்பட்டன. இந்த டாஸ்மாக் திடீர் வேலைநிறுத்தம் மாவட்ட நிர்வாகத்திற்கு சவாலாக அமைந்துள்ளது.


Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...