திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: டாஸ்மாக் ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் நடைபெற்று வந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசு ஊழியர்களுக்கு நிகரான ஊதியம் வழங்குவது மற்றும் பணி நிரந்தரம் செய்வது தொடர்பாக ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என விக்னேஷ் உறுதியளித்ததாக கூறப்பட்டுள்ளது.

மேலும், காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை மாற்று ஊழியர்கள் மூலம் செயல்படுத்துவதற்கான நடவடிக்கை 15 நாட்களுக்குள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் உறுதி அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக டாஸ்மாக் ஊழியர்கள் அறிவித்துள்ளனர். இதன் காரணமாக நாளை முதல் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 197 டாஸ்மாக் கடைகளும் வழக்கம்போல் திறந்து செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், அரசு வழங்கியுள்ள கால அவகாசத்திற்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், அடுத்த கட்ட போராட்ட நடவடிக்கைகள் குறித்து கூட்டு குழு ஆலோசித்து முடிவு செய்யும் என்றும் டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...