டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசடி செய்த சம்பவம் தொடர்பான வழக்கின் மீது சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த 63 வயது தொழிலதிபர் ஒருவர் டிஜிட்டல் கைது மிரட்டல் மூலம் ரூ.20 லட்சம் இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பீளமேடு பகுதியைச் சேர்ந்த 63 வயதான நபரின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட ஒருவர், தான் மும்பை CBI அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். பின்னர், உங்கள் ஆதார் கார்டை பயன்படுத்தி சட்ட விரோதமாக பணப் பரிமாற்றம் நடந்துள்ளது என்றும், எனவே வங்கி கணக்கை பரிசோதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதை கேட்டதும், தான் யாருக்கும் பணம் அனுப்பவில்லை என்று பதில் அளித்துள்ளார். உடனே அந்த நபர், "நாங்கள் உங்களை டிஜிட்டல் கைது செய்துள்ளோம். எங்கள் அனுமதி இல்லாமல் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது. துப்பாக்கி ஏந்திய போலீசார் உங்களை கண்காணித்து வருகிறார்கள்" என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

மேலும், "உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை நாங்கள் சொல்லும் கணக்குக்கு அனுப்புங்கள். சரிபார்த்த பிறகு திரும்ப அனுப்பி விடுகிறோம். அதுவரை யாரிடமும் சொல்லக் கூடாது" என்று அந்த நபர் தெரிவித்துள்ளார்.

பயந்துபோன முதியவர், தனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.20 லட்சத்தை அந்த வங்கிக் கணக்குக்கு மாற்றினார். அதன் பிறகு மூன்று நாட்களாக வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தாக கூறப்படுகிறது. ஆனால், அதன் பிறகு யாரும் அவரை தொடர்பு கொள்ளவில்லை.

இதனால், சந்தேகம் அடைந்த முதியவர், CBI அதிகாரி என்று பேசிய நபரின் செல்போன் எண்ணுக்கு பலமுறை தொடர்பு கொண்டபோது அது ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. விசாரித்தபோது தான் டிஜிட்டல் கைது என்ற பெயரில் மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது.

அவர் அளித்த புகாரின் பேரில் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், "டிஜிட்டல் கைது என்பதே கிடையாது. மர்ம நபர்கள் குறிப்பாக முதியவர்களை குறிவைத்து இது போன்ற மோசடிகளில் ஈடுபடுகிறார்கள். பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும். டிஜிட்டல் கைது என்று யார் கூறினாலும் நம்ப வேண்டாம். உடனடியாக 1930 என்ற எண்ணில் சைபர் கிரைம் ஹெல்ப்லைனை தொடர்பு கொள்ள வேண்டும்" என்று அறிவுறுத்தினர்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...