ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீரோட்டம் மற்றும் உடல் எடை காரணமாக மீட்பு தோல்வியடைந்ததால் யானை உயிரிழந்தது. இன்று உடுமலை அணை பகுதியில் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனை நடைபெறுகிறது.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தின் பொள்ளாச்சி வனக்கோட்டம் பகுதியில் காண்டூர் கால்வாயில் சிக்கிய ஆண் யானை உயிரிழந்த சம்பவம் வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் வனத்துறை மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி வனச்சரகத்திற்குட்பட்ட சேத்துமடை கிழக்கு பிரிவின் பச்சத்தண்ணீர் சுற்று பகுதியில்,

கடந்த மே 23, 2026 அன்று மாலை 4 மணியளவில், சுமார் 20 அடி ஆழமுள்ள காண்டூர் கால்வாயில் ஒரு ஆண் யானை சிக்கியிருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற களப்பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டபோது, யானை கால்வாயின் உள்ளே சிக்கி நீரின் வேகமான ஓட்டம் மற்றும் ஆழம் காரணமாக சுவாசிக்க கடுமையாக போராடிய நிலையில் இருந்தது தெரியவந்தது.

உடனடி மீட்பு முயற்சிகள்



இதுகுறித்து ஆனைமலை புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, காண்டூர் கால்வாய் பிரிவு அதிகாரிகளுடன் இணைந்து கால்வாயின் நீரோட்டத்தை நிறுத்தவும், நீர்மட்டத்தை குறைக்கவும் அவசர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இருப்பினும், நீரின் ஓட்டம் முழுமையாக குறைய கணிசமான நேரம் எடுத்துக்கொண்டது.

JCB இயந்திரம் மூலம் அகழ்வு செய்து யானையை மீட்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் யானையின் அதிக உடல் எடை மற்றும் நீரின் அழுத்தம் காரணமாக மீட்பு பணியில் பெரும் சிரமம் ஏற்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர். மீட்புக் குழுவினர் இடைவிடாது முயன்றபோதிலும், சாதகமற்ற சூழ்நிலைகள் காரணமாக மீட்பு சாத்தியமாகவில்லை.

யானை உயிரிழப்பு



மாலை சுமார் 6.40 மணியளவில், யானை கால்வாயின் உள்ளே உயிரிழந்த நிலையில் காணப்பட்டது. அச்சமயம் நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் உடலை உடனடியாக மீட்க முடியவில்லை என்பது மேலும் சிக்கலை ஏற்படுத்தியது.

காண்டூர் கால்வாயின் சுரங்கப்பாதை வழியாக திருமூர்த்தி அணை பகுதியை உடல் சென்றடையும் என்பதால், உடல் நீரோட்டத்துடன் செல்ல அனுமதிக்கப்பட்டதாகவும், இதுகுறித்து உடுமலை வனச்சரக அலுவலர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் வனத்துறை அதிகாரிகள் கூறினர்.

பிரேத பரிசோதனை நடைபெறுகிறது



மே 24, 2026 அன்று உடுமலை வனச்சரக அலுவலரின் நேரடி மேற்பார்வையில் வனக் கால்நடை மருத்துவ குழுவினரால் யானையின் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மரணத்திற்கான சரியான காரணத்தை கண்டறிய விரிவான பிரேத பரிசோதனை நடத்தப்படும் என்று வனத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...