புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்றும் திருத்தேர் திருவிழா பக்தி மிகு சூழலில் சிறப்பாக நடைபெற்றது. கரகம் வீதியுலா, திருத்தேர் பவனி, திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Coimbatore: கோவை : கோவை புதுசித்தாபுதூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவமும் திருத்தேர் திருவிழாவும் பக்தி மிகு சூழலில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழா மே 5 முதல் மே 22, 2026 வரை நடைபெற்ற நிலையில், தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் அபிஷேகங்கள், தீபாராதனைகள், சிறப்பு பூஜைகள் மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



விழாவின் சிறப்பு அம்சங்களாக திருக்கல்யாணம் மற்றும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 2000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளைப் பெற்றனர்.



விழாவின் முக்கிய நிகழ்வாக மே 20ஆம் தேதி காலை கரகம் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தது. தொடர்ந்து மதியம் மஹா ரதம் எனப்படும் திருத்தேர் சிறப்பாக புறப்பட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் திருவருளைப் பெற்றனர்.



மேலும், விழா நாட்களில் பக்தர்களுக்காக அன்னதானம், இசை நிகழ்ச்சிகள் மற்றும் ஆன்மிக சொற்பொழிவுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. குடும்பத்துடன் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

Newsletter

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...

PMBJP திட்டத்தின் கீழ் கோவைக்கு ரயிலில் வந்த 1,300 டன் மானிய உர மூட்டைகள்

பிரதம மந்திரி பாரதிய ஜன உர்வராக் பரியோஜனா (PMBJP) திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பிலான சுமார் 1,300 டன் மானிய யூரியா உ...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச...

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...