விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக்கு வருவாய் கோட்டாட்சியர் அரசு சார்பில் நேரில் சென்று மரியாதை செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.


கோவை: கோவை மாவட்டம், கோவை வடக்கு வட்டம், நரசிம்மநாயக்கன்பாளையம் கிராமம், ஸ்ரீ பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்த சங்கீத் (19), தந்தை ராஜ்குமார் என்பவரின் மகன். இவர் எஸ்.என்.எஸ் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த 15.05.2026 அன்று இரவு 11.30 மணியளவில் குருடம்பாளையம் கிராமம், தொப்பம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது விபத்தில் சிக்கியுள்ளார். படுகாயமடைந்த அவர் உடனடியாக கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் சங்கீத் மூளைச்சாவு அடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், இன்று மாலை அவர் உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து, சங்கீதின் குடும்பத்தினர் மனிதநேய அடிப்படையில் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கோயம்புத்தூர் வடக்கு வருவாய் கோட்டாட்சியர் அரசு சார்பில் நேரில் சென்று மரியாதை செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...