கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த வெரைட்டிஹால் போலீசார், ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




கோவை: கோவை தெலுங்கு வீதியில் காவல்துறையினர் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால், போலீசார் அவரது வாகனத்தை சோதனை செய்தனர்.



சோதனையில்தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவரின் பெயர்பிரகாஷ் என்பதும் அவர் அங்கு கடை நடத்தி வருவதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து, கடையில் போலீசார் சோதனை மேற்கொண்ட போது, அங்கு சுமார் 700 கிலோ அளவிலான குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து வெரைட்டிஹால் போலீசார் 700 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்ததுடன், பிரகாஷை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், பெங்களூருவில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை கோவைக்கு கடத்தி வந்து விற்பனை செய்து வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...