பல்லடத்தில் 707 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்; இருவர் கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 707 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் செட்டிபாளையம் சாலை பகுதியில், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.



இதையடுத்து, பல்லடம் காவல் ஆய்வாளர் மாதையன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த இருவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்துள்ளனர். 



தொடர்ந்து, அவர்கள் வந்த காரை போலீசார் சோதனை செய்தபோது, தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் குஜராத்தை சேர்ந்த லோதா பாபா பாய் மற்றும் கர்நாடகாவை சேர்ந்த ராஜேந்திரன் என்பது தெரியவந்தது.

மேலும், கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு விற்பனைக்காக குட்கா பொருட்கள் கடத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. போலீசார் அவர்களிடமிருந்து சுமார் 707 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர், இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...